சிம்புவை எதிரியாய் பார்க்கும் 2 ஹீரோக்கள்.. அடிதடியில் கட்டிபுரண்ட வாரிசு நடிகர்

2 heroes who see Simbu as an enemy: கலைமாமணி, ஸ்டைலிஷ் ஸ்டார் ஆப் சவுத் சினிமா போன்ற பல விருதுகளை தன்வசம் வைத்திருக்கும்  லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் ஸ்டைலிஷ் லுக் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சரித்திரத்தை பின்புலமாகக் கொண்ட  கதையில் கமிட் ஆகி இருந்தார் சிம்பு.  

பல்வேறு  காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டு போக கமல் STR48 இல் கமிட் ஆகி இருந்த சிம்புவை மணிரத்தினத்தின் இயக்கத்தில் தான் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் இணைத்துக் கொண்டார்.

மணிரத்தினம் மற்றும் கமல்  இருவரும் பல வருடங்களுக்குப் பின் இணையும் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது தக் லைஃப்.

கமல், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, கௌதம் கார்த்திக் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து கொண்ட தக் லைஃப்பில் பல்வேறு தாமதங்களால் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.

ஆரம்பத்தில் இதில் உள்ள கலெக்டர் கதாபாத்திரத்திற்கு துல்கர் சல்மான் ஒப்பந்தமானார். படப்பிடிப்பில் ஏற்படும் தாமதத்தை காரணமாக கூறி நைசாக நழுவி கொண்டார் துல்கர்.

துல்கரின் கதாபாத்திரத்திற்கு சிம்புவை பரிந்துரை செய்தார் கமல். மணிரத்தினமும் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்த சிம்புவின் நடிப்பு பிடித்துப் போக அவரும் உடனடியாக ஓகே சொன்னாராம்.

இதை சற்றும் எதிர்பாராத ஜெயம் ரவி சிம்பு தக் லைஃப்பில்  இணைவதாக கூறப்பட்டதும், தக் லைஃப்பில் இருந்து விலகுவதாக கூறி வெளியே வந்தார்.

இதே கதை தான் பொன்னியின் செல்வன் படத்திலும் சிம்புவிற்கு நடந்தது. மணிரத்தினம் ஒரு கதாபாத்திரத்திற்கு சிம்புவின் பெயரை பரிந்துரைக்க, அப்போதும் ஜெயம் ரவிக்கு பிடிக்காமல் போனது.

அப்பொழுது சிம்புவே தானாக முன்வந்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகினார் என்று வலைபேச்சு அந்தணன் கூறினார். 

அப்போது அதை ஒத்துக் கொள்ளாத ஜெயம் ரவி தற்போதும் எந்த காரணமும் கூறாமல் கால்ஷீட் பிரச்சனையை கூறி தக் லைஃப்பிலிருந்து வெளியேறியுள்ளார்.

மாற்றாக ஜெயம் ரவியின் கதாபாத்திரத்திற்கு விஜய குமாரின் மகன் அருண் விஜய்யின் பெயர் பரிசீலிக்கப்பட,

இவருக்கும் சிம்புவுக்கும் முன்பு ஏற்கனவே கிரிக்கெட் பார்க்க சென்றபோது அடிதடி பிரச்சனையாம். இதனால் அருண் விஜய்யும் தக் லைஃப்பில்  இணைவது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் மணிரத்தினத்தின் பேவரைட் ஹீரோவான அரவிந்த் சாமியை, ஜெயம் ரவியின் கதாபாத்திரத்திற்கு நடிக்க வைக்க பேசி வருகின்றனர் படக் குழுவினர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment