பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆயிரம் கோடி சம்பளம் கேட்கும் பிரபலம்.. அண்ணாந்து பார்க்கும் திரையுலகம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி பல மொழிகளில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் தொடங்கினாலே போதும் கண்டெண்ட் கிடைத்துவிடும் என மீம்ஸ் கிரியேட்டர்ஸ் சந்தோஷபடுவார்கள். அந்தளவுக்கு சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத இடம் பிக்பாஸ் வீடு.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த முறை கமல்ஹாசனால் பலர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த சீசனில் யார் தொகுத்து வழங்குவார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

தற்போது பிக்பாஸ் ஹிந்தி பதிப்பில் 15 சீசன் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் 16 வது சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த 15 சீசன்களுமே பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் இவர் பலமுறை நிகழ்ச்சியை விட்டு வெளியேற நினைத்துள்ளார்.

ஆனால் தயாரிப்பாளர்கள் சல்மான்கானை வற்புறுத்தியதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து ஹோஸ்ட் செய்து வருகிறார். கடந்த சீசனில் சல்மான்கான் தொகுத்து வழங்க 350 கோடி சம்பளமாக பெற்று இருந்தார். ஆனால் தற்போது பிக் பாஸ் சீசன் 16 ஹோஸ்ட் செய்ய 1,050 கோடி கேட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியும் 50 கோடி வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் எஎன்பதால் முன்னதாகவே 1,050 கோடி கேட்டுள்ளார். இதைக் கேட்ட திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டு உள்ளதால் பிக்பாஸ் செய்வதறியாமல் உள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பல பட வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.

இதனால் சல்மான்கான் தனது சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒருபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சல்மான் விலக நினைத்தும் தயாரிப்பாளர்கள் விடுவது இல்லை என்பதால் ஒருவேளை இப்படி அதிகமாக சம்பளம் கேட்டால் நம்மை விட்டு விடுவார்கள் என்பதற்காக இப்படி கேட்டுள்ளார் என்ற கோணத்திலும் பேசி வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →