அஜித், நயன்தாராவை ஒதுக்க இதுதான் காரணமா..? தயாரிப்பாளர்களை பரிதவிக்க விடும் லேடி சூப்பர் ஸ்டார்

நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பில் இருந்தே இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வருகின்றனர். ஆனால் அந்தப் பட்டத்தை நயன்தாராவுக்கு அதிகாரப்பூர்வமாக யார் கொடுத்தார் என்பது இதுவரை தெரியவில்லை.

நயன்தாரா எந்த அளவுக்கு சினிமாவின் உச்சத்தில் இருக்கிறாரோ, அதே அளவுக்கு அவருக்கு கர்வமும் கொஞ்சம் அதிகம் தான் என்கிறார்கள் சினிமா பிரபலங்கள். மேலும் உண்மையை சொல்லப் போனால் நிறைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிகை நயன்தாரா மீது செம கடுப்பில் இருக்கின்றனர். இதுக்கு அவருடைய நடவடிக்கைகள் தான் காரணம்.

கோடிக்கணக்கில் நயன்தாராவுக்கு சம்பளம் கொடுக்கின்றனர் தயாரிப்பாளர்கள். ஆனால் அவர் அந்தப் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் செல்வதில்லை. இதுவே தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸில் நடிக்கும் படங்களுக்கு மட்டும் பிரமோஷன் வேலைகளில் பயங்கர முனைப்புடன் செயல்படுகிறார்.

மேலும் தொடக்கத்தில் இவர் கொஞ்சம் ஏனோ தானோ என்றுதான் படங்களில் நடித்து வந்தார். ஆனால் கஜினி படத்தில் ஏ ஆர் முருகதாஸ் என்னை ஏமாற்றி விட்டார், இனி அவர் படங்களின் நடிக்க மாட்டேன் என்று குற்றம் சுமத்திய நயன்தாரா கணிசமான தொகையை வாங்கிக் கொண்டு தர்பார் படத்தில் நடித்துவிட்டு சூப்பர் ஸ்டாருக்காக மட்டுமே அந்தப் படத்தில் நடித்ததாக பில்டப் கொடுத்தார்.

இப்படி தன்னுடைய தேவையில்லாத நடவடிக்கைகளால் பெயரை கெடுத்துக் கொள்ளும் நயன்தாரா இது போதாது என்று தான் நடிக்க ஒப்பந்தமாகும் படங்களின் கதையை இப்படி மாற்றுங்கள் அப்படி மாற்றுங்கள் என பல கோரிக்கைகளை வைக்கிறாராம்.

அதை மறுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அதன் பிறகு நயன்தாரா கால்ஷீட் கொடுப்பதே இல்லையாம். இந்த விஷயம் எல்லாம்  நடிகர் அஜித்குமாரின் காதுகளுக்கு எப்படியோ போகவே தான் நயன்தாராவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நடிகர் அஜித் நயன்தாராவை நிராகரித்து இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →