சீமானுடன் அடுத்த கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்.. விஜய் இடத்தை பிடிக்க போட்ட மாஸ்டர் பிளான்

Sivakarthikeyan: அண்ணன் எப்போ எந்திரிப்பான் திண்ண எப்போ காலி ஆகும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது தமிழ் சினிமாக்காரர்களுக்கு தான் சரியாக இருக்கிறது. நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என அறிவிப்பு கொடுத்தும், எதுவுமே தெரியாதது போல் இருக்கிறார்கள்.

இருந்தாலும், சைலன்டாக விஜய் இடத்தை பிடிப்பதற்கு போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ரேஸில் மும்முரமாக இறங்கி இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அடுத்தடுத்து கொடுக்கும் மாஸ் அப்டேட் பார்க்கும் பொழுது அடுத்த விஜய் ஆக முயற்சி செய்கிறார் என்று தான் தோன்றுகிறது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து தன்னுடைய 23 வது படத்தில் பணியாற்ற இருக்கிறார். இந்த படத்திற்கு சிங்க நடை என தலைப்பு வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சீமானுடன் அடுத்த கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யூத் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அப்டேட் வெளியாகிவிட்டது.

அஜித்துடன் இணைந்து மங்காத்தா மற்றும் விஜய்க்கு GOAT படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைய இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நடிக்க இருப்பதாக அப்டேட் வெளியாகி இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →