எல்லாம் ஒரு லிமிட்டு தான்.. ‘கடவுளே அஜித்தே’ அஜித்துக்கே அவர் Fans-ஐ பிடிக்காததுக்கு காரணம் இதான் போல

தல தளபதி இருவரும் நண்பர்கள் தான். ஆனால் அவர்களுடைய ரசிகர்கள் செய்யும் அட்டூழியம் ஒரு அளவில்லாமல் கடந்த சில தினங்களாக போகிறது. தளபதி ரசிகர்கள் தளபதியை கொண்டாட சில காரணங்கள் உள்ளது.

விஜய் கட்சியை துவங்கி வெற்றிகரமாக கொண்டு செல்கின்றார். கோட் படமும் காலெக்ஷனில் புதிய சாதனை செய்துள்ளது. ஆனால் தல ரசிகர்கள் மார் தட்டிக்கொள்ளும் அளவிற்க்கு, எந்த விஷயத்தையும் அஜித் செய்யவில்லை. அப்டேட்டும் இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போன அஜித் ரசிகர்கள் புதிய ட்ரெண்டை உருவாக்கினார்கள்.

சம்பந்தமே இல்லாமல், ‘கடவுளே அஜித்தே’ என்று கூச்சலிடுவதை ஒரு பொழுதுபோக்காகவும், நாங்கள் இருக்கிறோம் என்று காட்டுவதற்காகவும் இதை செய்து வந்தனர். இந்த நிலையில், தற்போது இந்த கூச்சலிடுவதும், கும்மாளம் போடுவதும், சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

வீர மரணம் அடையும் வேளையில் ஒலித்த சத்தம்..

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார். மேலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், இதுவரை 68 கோடி-க்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது.

இந்த படம் மேஜர் முகுந்த் வரதராஜின் உண்மை வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. வீர மரணம் அடைந்த ஒரு இந்திய ராணுவரின் கதை. அவருக்கென்று ஒரு மரியாதை உள்ளது. கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாத சில அஜித் ரசிகர்கள், வீர மரணம் அடையும் காட்சி வரும்போது, ‘கடவுளே அஜித்தே’ என்று கூச்சலிட்டுள்ளனர்.

மிகவும் உருக்கமான காட்சி, அதுவும் ஒரு மேஜரின் மரண காட்சியில் இப்படி கத்துவது, அவருக்கு செய்யும் அவமதிப்பாகவே பார்க்கபடுகிறது. இவர்களுடைய இந்த கூச்சல் சத்தம், படம் பார்ப்போருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, படம் பார்க்க வந்தவர்கள், ‘ஒரு லிமிட்டு தான்..’ என்றும் முணுமுணுத்துள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment