வலிமை ரிலீஸ் தேதியை அறிவிக்க தயங்கும் அஜித்.. வெளிவந்த உண்மையான காரணம்

பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த வலிமை படம் கொரோனா மூன்றாவது அலை காரணமாக தள்ளிப் போகவே, தற்போது படக்குழுவினர் கிட்டத்தட்ட ஒரு தேதியை முடிவு செய்துள்ளனர். அந்த தேதியை மனதில் வைத்து படம் ரிலீசாவதற்கு அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர்.

அஜித் மட்டும் அந்த தேதியை வெளியில் உறுதியாக சொல்ல வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதற்கும் ஒரு காரணத்தை படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். கடைசியாக வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வலிமை படம் வெளிவரும் என தகவல்கள் உறுதியாகச் சொல்கின்றன.

இப்பொழுது கொரோன மூன்றாவது அலை குறைந்து வருவதால் வெகுவிரைவில் திரையரங்குகளில் அரசாங்கம்100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி தர முடிவு செய்துள்ளது.

அஜித் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டுவதற்காக ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது அண்ணாத்தை படம் ரிலீஸ் ஆகும்போது அரசாங்கம் தியேட்டருக்கு 100 சதவீத அனுமதி கொடுத்திருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் அரசாங்கம் இவ்வாறு செயல்படுகிறது என்ற ஒரு பேச்சு அடிபட்டது.

இதையெல்லாம் யோசித்த பின்தான் அஜித் இந்த படத்திற்கும் அந்த மாதிரி ஒரு பேச்சு வரும் என்று சற்று அமைதியாக இருக்கிறார். அரசாங்கம் அறிவித்த பின்னரே நாம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் என்று அமைதி காக்குமாறு கூறியுள்ளார்.

எது எப்படியோ படத்தை இம்மாதம் ரிலீஸ் செய்தால் போதும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அஜித் மௌனத்தின் பின்னணியை அறிந்த அனைவரும் அவரின் முடிவு சரியானது என்று பாராட்டி வருகின்றனர்

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →