டீன் ஏஜ் வயதில் கார்னர் சீட்டில் நடத்த கசமுசா.. தியேட்டரையே அதிரவைத்த அமலாபால்!

ஆடை படத்திற்குப் பிறகு அமலாபாலுக்கு தமிழில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இவர் தமிழில் விஜய், தனுஷ், சூர்யா இதுபோன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அமலாபால் தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அமலாபால் தற்போது காடவர் என்ற படத்தில் நடித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படம் வருகிற 12-ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜூ வீட்ல பார்டி எனும் நிகழ்ச்சியில் அமலா பால் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராஜு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் ஏற்கனவே சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் டீன்-ஏஜ் வயதில் காதலித்தது உண்டா என்ற கேள்வி அமலாபாலிடம் வைக்கப்பட்டது. அதற்கு டீன் ஏஜ் வயதில் ஒருவரை காதலிப்பதாக அமலாபால் கூறியிருந்தார். அது டீன் ஏஜ் வயது என்பதால் எங்களுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த நாட்களில் நாங்கள் இருவரும் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு செல்வோம். அப்போது எங்களுக்கு கடைசியில் கார்னர் சீட்டு தான். அப்போது எங்களின் முத்த மொத்த சத்தத்தை கேட்டு மொத்த தியேட்டருமே திரும்பிப் பார்க்கும் என்ற அமலாபால் கூறியுள்ளார். இவ்வாறு தனது கடந்தகால காதலைப்பற்றி அமலாபால் பகிர்ந்துகொண்டார்.

மேலும் சிறுவயதிலிருந்தே சூர்யா மீது கிரஷ் இருந்ததாகவும் தற்போது சிம்புவை பிடிக்கும் என அமலாபால் கூறியிருந்தார். அப்போது அமலா பால் கையிலிருந்த லவ் மீட்டர் சிம்பு பெயரை சொன்னவுடனே கிடுகிடுவென மேலே ஏறிவிட்டது. இதனைப் பார்த்த பலரும் துள்ளிக் குதித்தனர். இதனால் விரைவில் சிம்பு, அமலாபால் கூட்டணியில் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →