கோட் பட வசூலை மிஞ்சப்போகும் அமரன் வசூல்… சும்மாவா சொன்னாரு தளபதி

அமரன் படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். ஏன் என்றால் எத்தனை பிரமாண்ட படங்கள் வந்தாலும் அமரன் படத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. கமல் வீட்டில் ஒருபக்கம் பனமழை கொட்டிக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் Box office-ல் தளபதியின் பீகில் பட வசூலையே மிஞ்சியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் அமரன் திரைப்படம் உச்சபட்ச வசூலை குவித்த படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அவரது தோற்றங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளன. மேலும் சாய் பல்லவி காதல் மனைவியாக வருவதை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு மனைவி வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்கள்.

கோட் பட வசூலை மிஞ்சிரும் போல

உலகளவில் 294 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது அமரன் படம். இப்போது வரை படம் ஹவுஸ் பிலால் full-ஆக தான் இருக்கிறது. கோட் படத்தில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்த நேரமா என்ன என்பது தெரியவில்லை. சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை தான். அவருக்கு தொடர்ந்து படங்கள் வந்துகொண்டிருக்கிறது.

மேலும் தளபதி ரசிகர்கள் தற்போது , அடுத்த குட்டி தளபதி சிவகார்த்திகேயனை அவரது சினிமா வாரிசாக ஏற்று கொண்டாடி வருகின்றனர். 2019 இல் வெளிவந்த விஜய்யின் பிகில் திரைப்படம் ரூ. 292 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமரன் வெளியான 18 நாட்களில் மட்டும் உலகளவில் 294 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

தற்போது தொடர்ந்து அமரன் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் ஒட்டுமொத்தமாக ரூ. 350 கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள், சும்மாவா சொன்னாரு தளபதி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment