ஒரே கேரக்டரால் விட்ட இடத்தை பிடித்த நடிகை.. நயன்தாராவுக்கு வந்த புது சிக்கல்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். வளர்ந்து வரும் பல இளம் நடிகைகளும் எப்படியாவது அவருடைய இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனாலும் நயன்தாரா நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டு மாஸ் காட்டி வருகிறார். அதிக சம்பளம், ப்ரோமோஷனுக்கு வரமாட்டார் என்ற பல சர்ச்சைகள் இருந்தாலும் இவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அவர் தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் இடத்திற்கு தற்போது ஒரு புது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது அவர் தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் திரிஷா. தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழி நடிகர்களுடனும் நடித்திருக்கும் இவருக்கு இன்று வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஆனால் நயன்தாராவின் வரவுக்கு பின்னர் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதிலும் இவரின் கடந்த சில திரைப்படங்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போனது. இப்படி பல தோல்விகளை சந்தித்து வந்த திரிஷாவுக்கு தற்போது பொன்னியின் செல்வன் மூலம் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

அதில் குந்தவை நாச்சியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறார். அவருடைய அந்த கதாபாத்திரத்தை பற்றிய பேச்சு தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல். அப்போது பார்த்தது மாதிரியே இருக்கும் த்ரிஷாவின் அழகும் ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

மேலும் தற்போது திரிஷாவுக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறதாம். அதனால் அவர் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் நோக்கில் கவனமாக தன்னுடைய கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் விஜய் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்திலும் அவருக்கு ஒரு கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் பார்த்து தற்போது நயன்தாரா கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகிறாராம். இத்தனை வருடமாக கட்டிக் காத்த தன்னுடைய இடம் மீண்டும் த்ரிஷாவின் கைக்கு சென்று விடுமோ என்ற பயமும் அவருக்கு இருக்கிறதாம். தற்போது கணவருடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கும் நயன்தாரா தீவிரமாக மீண்டும் நடிப்பில் களமிறங்க முடிவெடுத்துள்ளார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →