சிம்பு படத்தில் முக்கிய வில்லனாக நடித்த நடிகர்.. ஆனா தனுஷோட தீவிர ரசிகனாம்

சினிமாவைப் பொறுத்தவரையில் பெரிய இரு நடிகர்களின் ரசிகர்களிடம் எப்போதுமே போட்டி நிலவும். அந்த வகையில் விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக தனுஷ், சிம்பு ரசிகர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த இரு நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் மற்ற நடிகர்கள் படத்தோடு ஒப்பிட்டு இணையத்தில் விமர்சனங்கள் வருகிறது.

ஆனால் தனுஷ் உடைய தீவிர ரசிகர் ஒருவர் சிம்புவின் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருந்த படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

வெந்து தணிந்தது காடு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் நடித்திருந்தார். மலையாள சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான நீரஜ் தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவருடைய முதல் படம் வெந்து தணிந்தது காடு.

சென்னையில் கல்லூரி படித்த இவருக்கு தமிழ் சினிமா மீது அதீதப் பிரியமாம். அதுவும் வெந்து தணிந்தது காடு படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் நீரஜ் மாதவ் ராப் பாடல் பாடியிருந்தார். இருந்தாலும் இந்த படத்தில் மல்லிப்பூ பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என நீரஜ் பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் வெந்து தணிந்தது காடு படம் வெளியான சமயத்தில் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த நீரஜ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் என பலமுறை கூறியுள்ளார். இவ்வாறு தனுஷின் தீவிர ரசிகராக இருக்கும் நீரஜுக்கு தமிழ் சினிமாவில் முதல் முறையாக சிம்பு படத்தில் தான் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்த தமிழ் சினிமாவில் நீரஜ் மாதவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மிக விரைவில் தனுசுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இவரது பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →