சிவகார்த்திகேயனை நம்பி மோசம் போன இளம் காமெடி நடிகர்.. பாதி வடிவேலுவாய் மாறிய SK

An incident where Sivakarthikeyan disrespected the artist he was familiar with: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வென்றுதன் மூலம் பிரபலமாகி கிடைக்கும் வாய்ப்புகளை விடாமல் பயன்படுத்தி தொகுப்பாளராக அவதாரம் எடுத்து பின் அப்படியே வெள்ளி திரைக்கு தாவியவர் சிவகார்த்திகேயன். குறிப்பிட்ட சில வருடங்களில் சிவகார்த்திகேயன் வளர்ச்சி அபாரமானது.

மெரினா, தனுஷின் 3, மனம் கொத்திப் பறவை போன்ற படங்களில் நடித்தவருக்கு எதிர்நீச்சல் சிறந்த நடிகருக்கான சிறப்பான அந்தஸ்தை கொடுத்தது. தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் நம்ம வீட்டு பிள்ளை என வழக்கமான காமெடியில் பின்னி பெடல் எடுத்து ரசிகர்களை நெஞ்சில் நீங்கா இடம் பெற்றதோடு முன்னணி நடிகராகவும் மாறிப்போனார்  சிவகார்த்திகேயன.

தொடர்ந்து டாக்டர், டான், மாவீரன் என வெற்றி படங்களோடு வசூல் ரீதியாகவும் 100 கோடி கிளப்பில் இணைந்தார் சிவகார்த்திகேயன். இது தவிர பாடகராகவும் தயாரிப்பாளராகவும் புதுப்புது அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அண்ணாந்து பார்ப்பது போல் அபரிமிதமாக இருந்தது.

ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அவருடன் நெருங்கி பழகிக் கொண்டிருந்த நட்பு வட்டாரங்களில் ஒருவர்தான் பிளாக் பாண்டி.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை படத்தின் மூலம் திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பிளாக் பாண்டி. தொடர்ந்து தெய்வத்திருமகள், அங்காடித்தெரு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானர்.

சமீபத்தில் பிளாக் பாண்டி அவர்கள், சிவா படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு சிவகார்த்திகேயனை சந்திக்க சென்றுள்ளார். இவரைப் பார்த்த சிவகார்த்திகேயன் மேனேஜரோ சிவாவிடம் பேசிவிட்டு 20000 பணத்தை மட்டும் கவரில் வைத்து பிளாக் பாண்டியிடம் கொடுத்து விட்டு சென்றாராம். இறுதிவரை பிளாக் பாண்டியை பார்க்க மறுத்த நண்பனை நினைத்து மனம் வருந்தி போனாராம் பிளாக் பாண்டி. ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு முன்னேறிய வடிவேலு ஆட்டிடியூட் காண்பித்து வருவது போல் சிவாவும் அதேபோல் நடந்து கொள்கிறார் என்று புலனாகிறது.

தன்னுடன் பழகிய இயக்குனர் அட்லியை தானாக முன்வந்து பாராட்ட தெரிந்த  சிவகார்த்திகேயன் வாய்ப்பில்லாமல் தவிக்கும் கலைஞர்களை கண்டுக்காமல் அவமதிப்பது ஏனோ!

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →