ஆண்டவர் தலையை உருட்டும் தயாரிப்பாளர்.. ஆளவந்தான் படத்தில் கமல் செய்த மிகப்பெரிய தவறு

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்த கமலஹாசன் வேற லெவலில் ஃபார்ம் ஆகி உள்ளார். மகேஷ் நாராயணன், லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி உள்ளார். மேலும் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதியிலிருந்து கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆளவந்தான். இப்படம் 1984 இல் உலகநாயகன் கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த கதையில் சில மாற்றங்கள் செய்து கமல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் கொடுத்து ஆளவந்தான் படத்தை இயக்க வைத்திருந்தார்.

இந்தப் படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மனிஷா கொய்ராலா மற்றும் ரவீனா டாண்டனும் கதாநாயகியாக நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் பல புதிய டெக்னாலஜிகளை கமல் பயன்படுத்து இருந்தார். அதுமட்டுமின்றி சில வன்முறையான காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்று இருந்தது.

ஆனால் ஆளவந்தான் படம் வெளியாகி மிக மோசமான தோல்வியை அடைந்தது. இந்நிலையில் ஆளவந்தான் படம் புதிய பொலிவுடன் 3டி டெக்னாலஜியில் மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அதாவது உலகநாயகன் கமலஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ஆம் தேதி ஆளவந்தான் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

ஆளவந்தான் படத்தின் தோல்விக்கு கமல் தான் காரணம் என்று ஆண்டவரின் தலையை உருட்டி உள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. அதாவது ஆளவந்தான் படத்தில் கமலின் திரைக்கதை தப்பாகிவிட்டது. இப்போது அதை சரி செய்து படத்திற்கு புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆளவந்தான் படம் 2 மணி நேரம் தான் ஓடும் என்றும், தல தெறிக்க படம் இருக்கும் என எஸ் தாணு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தாணு பேசியது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் மீண்டும் ஆளவந்தான் படத்தை 3d எஃபக்டுடன் பார்க்க கமல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →