அடுத்த படத்திற்காக தளபதியிடம் அட்லி வைத்த கோரிக்கை.. ரோலக்ஸ்யை மிஞ்சும் கதாபாத்திரம்

இயக்குனர் அட்லி தளபதி விஜய் உடன் இணைந்த தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவ்வாறு விஜய் தொடர்ந்து ஒரே இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு காரணம் அட்லியின் இயக்கமும்தான். இந்நிலையில் தற்போது அட்லி பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த படம் இயக்கிவருகிறார்.

ஜவான் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் அது பல படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் கேலிக்கு உள்ளானது. இந்நிலையில் தளபதி விஜய்யிடம் அட்லி ஒரு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஐந்து நிமிட காட்சி என்றால் அனைவரையும் அசரவைத்த சென்றார்.

இந்நிலையில் அதே போல் ஷாருக்கானின் ஜவான் படத்தில் தளபதி விஜய்யை கேமியோ தோற்றத்தில் நடிக்க வைக்க அட்லி ஆசைபட்டுள்ளார். இதற்கு விஜய் மட்டும் சம்மதித்தால் ஷாருக்கான் மற்றும் தளபதி இருவரையும் ஒரே திரையில் பார்ப்பது ஒரு சரித்திர நிகழ்வாக இருக்கும்.

ஷாருக்கான் மற்றும் விஜய் இருவருமே நன்கு நடனமாட கூடியவர்கள். பல விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஒன்றாக காட்சி அளித்துள்ளனர். இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் நடிக்கிறாரா என்ற உறுதிபட தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜவான் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ப்ரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் அடுத்த ஆண்டு 2023 இல் ஜூன் மூன்றாம் தேதி ஜவான் படம் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →