இந்த வேலை எல்லாம் அவருக்கு செட்டாகாது.. சூப்பர் ஸ்டாருக்கு இன்று வரை அல்வா கொடுக்கும் பாலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தைப் பார்த்து தனக்கு பிடித்துவிட்டால் உடனே அந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரையும் போனில் அழைத்து பாராட்ட கூடியவர். சமீபத்தில்கூட டான், விக்ரம் போன்ற படங்களை பார்த்தபின் ரஜினி படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பாலாவின் அவன் இவன் படம் பார்த்து மெய்சிலிர்த்து போன ரஜினி பாலாவை பாராட்டியுள்ளார். அதற்கு ஒரு படி மேலாக நம்ம ஒரு படம் பண்ணலாம் என ரஜினி வான்டட் ஆக கேட்டுள்ளார். ஆனால் பாலா தற்போது வரை ரஜினிக்கு அல்வா கொடுத்து வருகிறார்.

தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ஆரம்பத்தில் வாழ்வு தந்தவர் பாலாதான். ஒருவரிடம் எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்பதில் திறமையானவர். அதுமட்டுமன்றி நடிக்க தெரியாதவர்களிடம் இருந்தும் நடிப்பை வாங்கிவிடுவார்.

மேலும் பாலா தனது படத்தில் அவ்வளவு டெடிகேஷன் ஆன ஆளு. அவரது படத்தில் ஹீரோக்களை அழகாக காட்ட மாட்டார். சில சமயங்களில் நடிகர், நடிகைகளை கண்டபடி திட்டவும் செய்வார். மேலும் காட்சிகளை தத்ரூபமாக எடுக்க பாலா எது வேண்டுமானாலும் செய்வார்.

இதெல்லாம் நம்ம சூப்பர்ஸ்டார் கிட்ட எடுபடி ஆகாது. அவர் தற்போது ஒரு உயர்ந்த அந்தஸ்தில் இருக்கக் கூடியவர். இதனால் பாலா ஏதாவது ரஜினியை திட்டிவிட்டார் என்ற செய்தி வெளியானால் அவ்வளவுதான். தலைவரின் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளிப்பார்கள்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் ரஜினியை வைத்து படம் எடுக்காமல் பாலா டிமிக்கி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலா சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை எடுத்து வருகிறார். இப்படம் குறித்த அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகயுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →