விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் எக்ஸ் எம்எல்ஏ.. பயங்கரமாக தயாராகும் தளபதி 66

தற்போது விஜய், வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இதில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இது குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதில் பிரகாஷ்ராஜ், விஜய்யின் பல திரைப் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியிருக்கிறார்.

அந்த வகையில் இவர்களின் கூட்டணியில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிரகாஷ்ராஜ் மீண்டும் விஜய்யுடன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு அம்மாவாக நடிகை ஜெயசுதா நடித்து வருவதாக தயாரிப்பு நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இவர் ஏற்கனவே வம்சி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்தது குறிப்பிடதக்கது.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நாயகியாக நடித்திருக்கும் இவர் தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். அம்மா கேரக்டரில் நடித்தாலும் இவர் அதே இளமை மாறாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான். ஜெயசுதா ஏற்கனவே செகந்திராபாத்தில் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்.

அந்த வகையில் தற்போது அம்மா கேரக்டர் என்றால் இவர் தான் பல இயக்குனர்களின் சாய்ஸாக இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் இந்நிலையில் ஜெயசுதாவும் இந்த படத்தில் இணைந்திருப்பதால் படம் குறித்த ஆர்வம் அனைவருக்கும் எழுந்துள்ளது. இப்படி தொடர்ந்து வெளியாகும் அப்டேட்டுகளால் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

vijay66
vijay66
vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →