மாபெரும் வெற்றி பெற்ற அமரன்.. 17 நாட்கள் ஆகியும் குறையாத வசூல்

Amaran Collection : ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியான படம் தான் அமரன். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான இந்த படத்தை கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயன் இதில் அற்புதமாக நடித்த நிலையில் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக இப்போது அமரன் படம் அமைந்திருக்கிறது.

இப்படம் வெளியாகி 17 நாட்களைக் கடந்த நிலையில் இப்போதும் வசூல் குறையாமல் அள்ளி குவித்து வருகிறது. சமீபத்தில் சூர்யாவின் கங்குவா படம் வெளியானாலும் அமரன் படத்திற்கான கூட்டம் குறைந்தபாடு இல்லை. இதனால் கமலின் கஜானா நிரம்பி வருகிறது.

17 நாட்களில் அமரன் படத்தின் வசூல்

உலக அளவில் 17 நாட்களில் கிட்டத்தட்ட 284 கோடி வசூலை அமரன் படம் எட்டி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை அமரன் படம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் மற்றும் இதுவரை 140 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

மேலும் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி அமரன் படம் ஓடிடி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இன்னும் சில காலம் ஓடிடி ரிலீசை தள்ளி வைக்க வேண்டும் என கமல் மற்றும் சிவகார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி ஓடிடி ரிலீஸும் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் சில காலம் தியேட்டரில் நல்ல வசூலை அமரன் படம் செய்யும். மேலும் 17 நாட்கள் ஆகியும் இப்போதும் இவ்வளவு வசூலை அமரன் படம் பெற்று வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment