வந்தியதேவனுக்கு டஃப் கொடுத்த கூல் சுரேஷ்.. பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தை போடு

நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் சமீ காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படத்தை பற்றி விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் சமீபத்தில் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டிலை ரசிகர்களுக்கு கொண்டு சென்றதில் பெரிய பங்கு இவருக்கு உண்டு.

கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என படத்தை வேற லெவலில் பிரமோஷன் செய்திருந்தார். ஆனால் சமீபத்தில் குடும்பத்தை நடத்துவதே மிக சிரமப்படுவதாக கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருந்தது. அதன் பின்பு சிம்பு தன்னுடைய படத்தில் கூல் சுரேஷுக்கு வாய்ப்பு கொடுப்பதாக சொல்லி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூல் சுரேஷ்க்கு ஐபோனை பரிசாக வழங்கி இருந்தார். இன்று மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது. இதற்காக அதிகாலையிலேயே கூல் சுரேஷ் குதிரையில் என்ட்ரி கொடுத்து அதகளம் செய்துள்ளார்.

பொன்னியின் செல்வனின் கதாபாத்திரமான வந்தயதேவனுக்கே டஃப் கொடுத்துள்ளார் கூல் சுரேஷ். அதிலும் வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தை போடு என்று தனக்கே உண்டான வசனத்தை பேசி இருந்தார். மேலும் நகையை அடமான வைத்து தான் இந்தக் குதிரையை கடனாக வாடகைக்கு எடுத்து வந்ததாக கூல் சுரேஷ் கூறியிருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக இருப்பதாகவும், அதிலும் ஜெயராமின் கதாபாத்திரம் மிகவும் இயல்பாக இருந்ததாகவும், தனக்கு பிடித்திருந்ததாகவும் கூல் சுரேஷ் கூறியிருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்பு கிடைக்காததை நினைத்து வருந்துகிறீர்களா என்ற கேள்வி கூல் சுரேஷிடம் கேட்கப்பட்டது.

cool-suresh-ps1

நான் இப்போதெல்லாம் எதற்குமே வருந்துவதில்லை என அசால்டாக கூறினார் கூல் சுரேஷ். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு அதிகாலையில் இருந்து திரையரங்குகளுக்கு குடும்ப ஆடியன்ஸ் படையெடுக்க தொடங்கினர். கூல் சுரேஷ் முதல் எல்லா பிரபலங்களும் தொடர்ந்து படத்திற்கு நேர்மையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →