கூல் சுரேஷ் வாழ்க்கை இனி என் கையில்.. கூவுனதுக்கு சிம்பு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்

சிம்புவின் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்த நிலையில் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டில் எல்லோரிடமும் கொண்டு சேர்த்தது நடிகர் கூல் சுரேஷ் தான். ஆரம்பத்தில் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வந்த கூல் சுரேஷ் சிம்புவின் தீவிர ரசிகர். மாநாடு படம் பார்த்துவிட்டு கூல் சுரேஷ் திரையரங்குகளில் இருந்து வெளி வரும்போது இவரது விமர்சனம் பலராலும் கவரப்பட்டது.

தொடர்ந்து படங்களை விமர்சித்து வரும் கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு என சிம்பு படத்தின் டைட்டிலை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கூல் சுரேஷ் எனக்கு யாரும் உதவவில்லை எனது நண்பன் சந்தானம் மட்டும்தான் உதவுகிறார்.

தற்போதும் நான் வறுமையில் தான் இருக்கிறேன் என்று கதறி அழுதிருந்தார். சிம்புவின் தீவிர ரசிகர் இவ்வாறு வறுமையில் இருப்பதை சிம்பு கண்டுகொள்ளவில்லை என பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஆனால் தற்போது கூல் சுரேஷ் கை மேல் பலன் வந்துள்ளது.

அதாவது சிம்பு தன்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதுமட்டும் இன்றி அவர் குடும்பம் என்னுடைய குடும்பம், அவருடைய வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூல் சுரேஷுக்கு நிறைய வாக்குறுதிகளை கொடுத்துள்ளாராம் சிம்பு.

இதனால் கூல் சுரேஷ் தற்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளாராம். எப்போதுமே தனது ரசிகனை சிம்பு கைவிடமாட்டார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் சிம்புவும் பல மேடைகளில் நான் இப்போதும் சினிமாவில் இருக்க காரணம் தன் ரசிகர்கள் என தொடர்ந்து பேசி வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →