சிவகார்த்திகேயனை பார்த்து பயந்து ஒதுங்கிய தனுஷ்.. வளர்த்த கிடா மார்பில் முட்டிய சம்பவம்

நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு தனுஷ்-செல்வராகவன் காம்போவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் நேரிடையாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதுகிறது.

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் தனுஷுடன் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். படத்தின் ட்ரைலரில் இயக்குனர் செல்வராகவனும் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

நானே வருவேன் திரைப்படத்தை பொன்னியின் செல்வனுடன் ரிலீஸ் செய்ய வேண்டாம் என தனுஷ் ரசிகர்களே வேண்டுகோள் விடுத்தும், இந்த படத்தை 29 ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர். நானே வருவேன் திரைப்படம் முதலில் தீபாவளி அன்று தான் ரிலீஸ் ஆக இருந்தது. பின்பு தான் 29க்கு முன் தள்ளப்பட்டு இருக்கிறது.

இதற்கு காரணம் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு லாக் செய்யப்பட்டு இருக்கிறது. அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் படத்துடன் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்ய தனுஷ் தயங்கி இருக்கிறார். எனவே செல்வராகவனிடம் பேசி இப்படி தேதியை மாற்றி இருக்கிறார்கள். நானே வருவேன் ரிலீஸ்க்கு இப்படி ஒரு பிளான் இருந்தது யாருக்கும் தெரியாது என்கிறார்கள். சிவகார்த்திகேயனுடன் இணைந்து தனுஷ் படம் ரிலீஸ் பண்ண தயங்குகிறார் என்கிறார்கள்.

மேலும் நானே வருவேன் திரைப்படம் வாலி, ஆளவந்தான் கதை பாணியில் இருக்கிறதாம். எனவே கதாநாயகன் கேரக்டர் மீது எப்படியும் ஒரு நெகட்டிவ் இம்பாக்ட் செல்வராகவன் வைத்திருப்பார், எனவே தனுஷ் இந்த படத்தை தீபாவளி நாளில் ரிலீஸ் செய்ய விரும்பாமல் ஏதேனும் ஒரு சாதாரண நாளில் ரிலீஸ் செய்ய சொல்லியதால் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →