2 வருடம் கழித்து அதிரடி முடிவெடுத்த தனுஷ்.. இப்பவாது ஹிட்டு குடுப்பீங்களா!

தனுஷ் தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு உள்ளானார். தற்போது அதிலிருந்து மீண்டு வருவதற்காக தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் தனுஷ் மீண்டும் படங்களை இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளாக்கியது.

இந்நிலையில் சமீபகாலமாக தனுஷின் படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. தனுஷ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் ரசிகர்கள் தனுஷ் படத்தை திரையில் பார்க்க முடியவில்லையே என்று சமூக வலைதளங்களில் தங்களது கோரிக்கையை வைத்தனர்.

தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் ராஷி கன்னா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் என மூன்று நடிகைகள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷின் மாறன் படம் ஓடிடியில் வெளியாகி எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதனால் திருச்சிற்றம்பலம் படத்தை படக்குழு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனால் இப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் பெரிய திரையில் பார்க்க வேண்டும் என ஆசைபட்ட அவரது ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அண்மையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் நானே வருவேன் படமும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் திரையரங்குகளில் தான் வெளியாக உள்ளது. மேலும் தனுஷ் தான் நடிக்கும் எல்லா படங்களை இனிமேல் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிடி தளம் தனுசுக்கு எந்த விதத்திலும் லாபத்தை கொடுக்கவில்லை, எதிர்பார்த்த படங்களும் ஓடவில்லை. இதனால் தியேட்டரில் வெளியிட்டால் மட்டுமே ஹிட்டாகும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்த படமாவது ஹிட் கொடுக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →