நடிக்க முடியாமல் போன ரஜினி, நஷ்டத்தை ஈடு கட்டிய பெரிய மனுஷன்.. இப்பவும் ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்

ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகருக்கு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து கிடைக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் இங்கு கமலுக்கு தான் மவுசு அதிகமாக இருந்தது. ஆனால் சில விஷயங்களில் ரஜினியின் செயல்பாடு காரணமாக அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது.

சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் கே ராஜன் ரஜினியை பற்றி ஒரு விஷயத்தை கூறி ரசிகர்களை புல்லரிக்க செய்துள்ளார். அதாவது பல மொழிகளில் 35 படங்களுக்கு மேல் தயாரித்தவர் தியாகராஜன். இவர் கமல், ரஜினிக்கு அதிக படங்களை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் ரஜினிகாந்தின் அன்புக்கு நான் அடிமை, அன்னை ஒரு ஆலயம், ரங்கா, தாய் மீது சத்தியம் போன்ற எண்ணற்ற படங்கள் இதில் அடங்கும். ரஜினியின் ராணுவ வீரன் படத்தை தியாகராஜன் தயாரிக்க முடிவெடுத்தார். அதற்கு ரஜினியும் ஒப்புக்கொண்டார்.

அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிய பின்பு முதல் 15 நாட்கள் ரஜினியால் நடிக்க முடியவில்லை. காரணம் அப்போது அவரது உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு சில நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரஜினி ஒரு வழியாக அந்த படத்தை முடித்துக் கொடுத்துள்ளார்.

கடைசியில் ராணுவ வீரன் படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் தியாகராஜன் ரஜினியிடம் சம்பளத்தை கொடுத்துள்ளார். அப்போது என்னால் நடிக்க முடியாத அந்தப் 15 நாட்கள் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும். ஆகையால் அந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என ரஜினி திருப்பி கொடுத்து விட்டாராம்.

இதை ஒரு முறை தியாகராஜனே உஷா ராஜேந்தர் இடம் சொல்லும்போது தான் கேட்டதாக கே ராஜன் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதனால் தான் அவர் தற்போதும் சூப்பர் ஸ்டாராக உள்ளார் என்றும், அவரது ரசிகர்கள் இன்று வரை கொண்டாடுகிறார்கள் என கூறியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →