“புகழ்” நடிக்கப் போனதால் வந்த சோதனை.. நன்றியை மறக்காமல் காப்பாற்றி விடப் போகும் நடிகர்

விஜய் டிவியிலிருந்து பிரபலமாகி வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் பலர். அதில் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற நடிகர்கள் பல உயரங்களை அடைந்துள்ளனர். அதேபோல் தற்போது சரத், தீனா, புகழ், சிவாங்கி போன்றவர்களும் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 3 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சமையலுடன், நகைச்சுவையும் இணைந்திருக்கும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சொல்லப்போனால் தளபதி விஜய்க்கு கூட இதுதான் ஃபேவரட் ஷோவாம்.

ஆனால் கடந்த 2 சீசன்களாக டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த சீசனில் சற்று மந்தமாகத்தான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் புகழ்தான் என்று கூறப்படுகிறது. தற்போது புகழ் படங்களில் பிஸியாக உள்ளதால் இந்நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.

இதனால் இந்நிகழ்ச்சியில் புதிய கோமாளிகள் பலரை இறக்கியுள்ளது. இதனால் சுவாரஸ்யம் சற்றுக் குறைந்து இருப்பதால் ரசிகர்கள் அதிகம் இந்நிகழ்ச்சியை பார்ப்பதை குறைத்துக் கொண்டனர். இதனால் தற்போது விஜய் டிவி ஒரு பக்கா ப்ளான் போட்டு உள்ளது.

தற்போது மாஸ் ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனை இந்தவார குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளது. சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக தற்போது சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட விஜய் டிவியை காப்பாற்றும் நிலைமையில் தற்போது சிவகார்த்திகேயன் உள்ளார். என்னதான் இருந்தாலும் நன்றி மறக்காத சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சிக்கு வர சம்மதம் தெரிவித்தது பலரும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →