மமிதா பைஜுவை ஓரங்கட்டிய கயாடு லோஹர்.. வரிசைகட்டி நிற்கும் படங்கள்

Kayadu Lohar : நயன்தாரா மற்றும் திரிஷா போன்ற நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நடிகைகள் அறிமுகமாகி ஒவ்வொரு ஆண்டும் சில நடிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டு பிரேமலு படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை மமிதா பைஜு பெற்றிருந்தார். இப்போது அவரை ஓரம்கட்டி டிராகன் படத்தில் நடித்த கயாடு லோஹர் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து கயாடு ரசிகர்களின் கவனம் ஈர்த்த நிலையில் தனது ஃபேவரட் நடிகர் விஜய் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

கயாடு லோஹர் நடிப்பில் உருவாகும் நான்கு படங்கள்

இந்த சூழலில் இப்போது நான்கு படங்கள் அவருக்கு வரிசைகட்டி நிற்கிறது. அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்து வருகிறார்.

ஃபங்கி என்ற படத்திலும் இவர் ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்வக்சென் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் காமெடி கலந்த குடும்ப என்டர்டைன் படமாக எடுக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் தாரம் படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

மேலும் ரவி தேஜாவின் புதிய படத்திலும் கயாடு நடிக்க இருக்கிறார். அடுத்த நேஷனல் கிரஷ் இவர்தான் என்ற அளவுக்கு தொடர்ந்து படங்கள் இவருக்கு குவிந்த வண்ணம் இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment