இந்தியன் 2 கொடுத்த அனுபவம்.. ஆண்டவரின் திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா.?

Indian 2-Kamal: விக்ரம் படத்தை போல் இந்தியன் 2 மாபெரும் வசூல் வேட்டை நடத்தும் என திரையுலகம் எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர் மாறாக கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் தான் படத்திற்கு கிடைத்தது.

இதனால் கமல் கொஞ்சம் அப்செட்டில் இருந்தார். ஆனாலும் தக் லைஃப் படவேலைகளை கவனிக்க சென்று விட்டார். ஆனால் அந்த படமும் பலத்த அடி வாங்கியது. அதை தொடர்ந்து இந்தியன் 3 வெளிவருமா என்ற சந்தேகம் இருக்கிறது.

ஆனால் லைக்கா படத்தை எப்படியாவது வெளியிட்டு விட வேண்டும் என சூப்பர் ஸ்டாரை தூது அனுப்பி இருக்கின்றனர். விரைவில் இந்த பஞ்சாயத்து முடிந்து மிச்ச சொச்ச காட்சிகள் எடுக்கப்பட்டு படம் வெளியாகும் என தெரிகிறது.

இந்தியன் 2 கொடுத்த அனுபவம்

ஆனால் இதில் லைக்கா ஷங்கர் மற்றும் கமல் இருவரின் சம்பளத்தையும் படம் வெளியான பிறகு கொடுக்கும் ஐடியாவில் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்த கமல் தற்போது ஒரு முடிவு எடுத்திருக்கிறார்.

என்னவென்றால் இனி அவர் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம். இதற்கு சம்பள பிரச்சினை கூட காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.

ஆனால் தற்போது எம்பி ஆகியிருக்கும் அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபடும் எண்ணத்திலும் இருக்கலாம். அதனால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் நடிக்க அவர் முடிவெடுத்து இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.

இது எப்படியோ இனி மற்ற தயாரிப்பாளர்கள் கமலை அணுகுவது கொஞ்சம் சிரமம் தான். பார்க்கலாம் ஆண்டவர் இதே முடிவில் உறுதியாக இருக்கிறாரா என்று.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →