நடிகர் விக்ரமின் தந்தை இந்த நடிகரா?. இத்தனை நாள் தெரியாம போச்சே!

சீயான் விக்ரம் தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மீது முழு நம்பிக்கையும் விக்ரம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் சிலர் தங்களது அப்பாக்கள் மூலம் சினிமாவில் நுழைந்துள்ளனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்துள்ளனர். அந்த வகையில் விக்ரமும் தனது திறமையால் மட்டுமே இந்த உயரத்தை அடைந்துள்ளார்.

ஆனால் விக்ரம் சினிமா பின்புலம் இல்லாமல் நுழைந்தார் என்று ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் விக்ரமின் தந்தை தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். விக்ரமின் தந்தை பெயர் வினோத் ராஜ். பரமக்குடியை பூர்வீகமாக கொண்ட இவர் சிறு வயதிலேயே சினிமா மீது உள்ள ஆசையால் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

அதன் பின்பு நினைத்தபடியே சினிமாவில் நடிகராக பலம் வந்தார். விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான கில்லி படத்தில் திரிஷாவின் தந்தையாக வினோத் ராஜ் நடித்திருப்பார். விஜய்யின் திருப்பாச்சி படத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தனது என் மகன் விக்ரமின் கந்தசாமி படத்திலும் இவர் நடித்திருந்தார்.

மேலும் வினோத் ராஜ் கலெக்டர் ராஜேஸ்வரி என்பவரை மணந்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிறந்தவர் தான் கென்னடி. சினிமாவில் நுழைந்த பிறகு கென்னடியின் பெயர் விக்ரமாக மாறியது. அதாவது சியான் விக்ரம் தான் இவர்களின் வாரிசு.

vikram-vinoth-raj

அதுமட்டுமின்றி வினோத் ராஜ், விக்ரமை தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக துருவ் விக்ரமும் சினிமாவில் நுழைந்துள்ளார். மேலும் இதுவரை விக்ரமின் அப்பா இவர் என்று தெரியாத பலரும் அவரது புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்து உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →