கைதி 2 ரகசியத்தை போட்டு உடைத்த கார்த்தி.. உச்சகட்ட கடுப்பில் லோகேஷ்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அதிலும் கடைசியாக வெளியான கமலஹாசனின் விக்ரம் படம் வசூல் வேட்டையாடியது.

லோகேஷ் கனகராஜின் கைதி 2 மற்றும் விக்ரம் 2 படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கைதி 2 விரைவில் உருவாகும் என்பது உறுதியாகிவிட்டது. இது பற்றி கார்த்தி பொன்னியின் செல்வன் மேடையில் பேசி இருந்தார்.

அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுகாக பல மாநிலங்களுக்கு செல்லும்போது கைதி 2 படத்தை பேசி இருந்தார்.

அதாவது லோகேஷ் தற்போது தளபதி 67 பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் அடுத்த ஆண்டு கைதி 2 படம் தொடங்கும் என கார்த்தி கூறியிருந்தார். அதுமட்டுமின்றி கைதி படத்தின் பட்ஜெட்டை விட 10 மடங்கு இப்படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும் என்றும் சொல்லியிருந்தார்.

மேலும் கார்த்தி ஆர்வக்கோளாறில் படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவலான ரோலக்ஸ் மற்றும் டில்லி மோத உள்ளதாக சஸ்பென்சை சொல்லி உள்ளார். விக்ரம் படத்திலேயே சூர்யா நடித்து இருப்பதை மிக சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

விக்ரம் படம் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு தான் ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. ஆனால் ஒரு பொது மேடையில் கைதி 2 படத்தின் சஸ்பென்சை கார்த்தி உடைத்ததால் அவர் மீது லோகேஷ் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →