விடா கண்டனாக துரத்தும் கர்நாடகா.. தக் லைஃப் காட்டும் விண்வெளி நாயகன்

Thug Life-Kamal: மணிரத்னம், கமல் கூட்டணியின் தக் லைஃப் இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. அதற்காக கமல் இந்த வயதிலும் ஒவ்வொரு மாநிலமாக சென்று பிரமோஷன் செய்து வருகிறார்.

அதேபோல் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்து விட்டது. ஆனால் இப்போது படம் கர்நாடகாவில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கன்னட மொழி குறித்து கமல் சொன்ன ஒரு கருத்து பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் ஒரு கலவரமே நடந்து வருகிறது.

தக் லைஃப் காட்டும் விண்வெளி நாயகன்

இல்லையென்றால் படம் வெளியாகாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் ஆண்டவர் தன் பிடியில் பிடிவாதமாக நிற்கிறார். பல கோடி நஷ்டமானாலும் எனக்கு கவலை இல்லை.

நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார். அதையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவில் இரண்டு நாட்கள் கெடு விதித்தனர்.

ஆனாலும் கமல் மன்னிப்பு கேட்கவில்லை. அதை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது நீதிபதி நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா என கேள்வி கேட்டு மன்னிப்பு கேட்க கெடு விதித்துள்ளார்.

இந்நிலையில் கமல் நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு ஏன் மன்னிப்பு என ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம் கொடுத்தாரே தவிர அதில் மன்னிப்பு என்ற வார்த்தை எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. இப்படியாக தொடர்ந்து தக் லைஃப் கொடுத்து வருகிறார் ஆண்டவர்.

அது மட்டும் இன்றி கர்நாடகாவில் படம் வெளியாகாது என்றும் அதை தள்ளி வைப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →