கேட்க முடியாத அளவிற்கு கமல் வைத்திருக்கும் பதில்.. விஜய்யையும் மாற்றும் அப்படி ஒரு நிலைமை.

கமலஹாசன் இன்று தக்லைஃப் படத்திற்கு பின், அன்பறிவு மாஸ்டர்களுக்கு ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் விக்ரம் மூன்றாம் பாகம் என அடுத்தடுத்து தனது பட வரிசைகளை நீட்டிக் கொண்டே போகிறார். இதற்கிடையில் ஏ ஐ தொழில் நுட்பத்தையும் கற்று வந்துள்ளார்.

இந்தியன் 2 படம் தான் தன்னுடைய கடைசி படம் என அரசியலில் இறங்கினார் கமல். மக்கள் நீதி மையம் கட்சியை வேறு லெவலில் புரமோட் செய்து வளர்த்து வந்தார். தன்னுடைய கட்சி சார்பாக கோயம்புத்தூரில் கமல் போட்டியிட்டு தோற்று விட்டார். இவரை எதிர்த்து நின்ற பிஜேபி வேட்பாளர் வானதி இடம் சிறிய வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

அரசியல் கை கொடுக்காத காரணத்தினால் மீண்டும் நடிக்கவே வந்து விட்டார் கமல். வந்தவர் தொடர்ந்து நடிக்கும் திட்டத்தில் இருக்கிறார். தன்னுடைய ராஜ்கமல் பட நிறுவனத்தை புதுப்பித்து மீண்டும் தயாரிப்பிலும் இறங்கி வருகிறார். இவர் தயாரித்த அமரன் படம் நல்ல லாபத்தை பெற்று தந்தது.

இப்பொழுது தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி இருக்கும் விஜய்யும் தனது கடைசி படம் ஜனநாயகன் என்று கூறியிருக்கிறார். ஒரு படத்திற்கு 200 கோடிகள் சம்பளம் வாங்கும் விஜய் அதை உதறிவிட்டு அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறார்.

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி எந்த அளவிற்கு கொடி கட்டி பறக்கும் என்று தெரியவில்லை. ஒரு வேலை கமல் மாதிரி இவருக்கும் அப்படி ஒரு நிலைமை வந்துவிட்டால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பாரா என்பதுதான் அனைவரது கேள்வியும். இதையே கமலிடம் கேட்டால் உங்களை நம்பிய என்னை கோயம்புத்தூரில் தோற்கடித்து விட்டீர்கள். அதனால் மீண்டும் நடிக்க வந்து விட்டேன் என கூறுவார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →