கபாலி, கட்டப்பா மாதிரி இல்ல இந்த ஆண்டவர்.. இறங்கி வருவாரா கர்வம் பிடித்த கமல்

தமிழ் மொழியில் இருந்து பிரிந்தது தான் கர்நாடகம் என பேச்சுவாக்கில் கமல் கூறிவிட்டார். தக்லைஃப் பட பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவராஜ் குமாரை பற்றி பேசிய கமல், வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்து இருந்தாலும் நாங்கள் சகோதரர்கள் தான் என்று கூறினார். அப்பொழுது தமிழில் இருந்து பிரிந்து போனது தான் கர்நாடக மொழி எல்லோரும் உறவுக்காரர்கள் என கூறினார்.

இதுதான் இப்பொழுது கர்நாடகத்தில் பூதாகர பிரச்சனையாக கிளம்பி உள்ளது. இப்போது அங்கே தக்லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என போராட்டம் நடக்கிறது. அந்த படத்தின் போஸ்டர்களையும் கிழித்து வருகிறார்கள். கமல் மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் இந்த பிரச்சனை தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் காவிரி நீர் பிரச்சனை வரும் பொழுது கர்நாடகத்துக்கு எதிராக குரல் கொடுத்த ரஜினி மன்னிப்பு கேட்டு விட்டார், அதை போல் உணர்ச்சிமிக்க பேசிய சத்யராஜும் மன்னிப்பு கேட்டு விட்டார். விடாப்பிடியாய் நின்ற சத்யராஜ், பாகுபலி படத்தை அங்கே திரையிடுவதற்கு பிரச்சனை செய்ததை ஒட்டி மன்னிப்பு கேட்டார்.

இப்பொழுது கமலுக்கு தக்லைஃப் படத்திற்கு அதை போல் தான் பிரச்சனை எழுந்துள்ளது. ஏற்கனவே கமல் விஸ்வரூபம் பஞ்சாயத்தில் வந்து பாருங்கள் என கர்வம் பிடித்து நின்றார். இந்தியாவை விட்டே போகிறேன் என சொன்னதும் அவருக்கு ஆதரவாக நிறைய பேர் நின்றார்கள்.

தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் 10 கோடி ரூபாய் கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர். இப்பொழுது அந்த பணத்திற்காக கமல் நிச்சயமாக இறங்கி வர மாட்டார். இந்த படத்தை தயாரித்ததில் கமலும் ஒருவர் அதனால் அதை எளிதாக சமாளித்து விடுவார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →