எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்த தக் லைப் பிரபலங்கள்!

Thug life : நீண்ட நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மணிரத்தினம் இயக்கிய “தக் லைப்” திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி பல தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

படத்தை பார்த்த ரசிகர்கள் திரிஷா, கமலின் காம்போவை பார்த்து பல மீம்ஸ் போஸ்டர்களை வெளியிட்டு வந்தனர்.

கலவையான விமர்சனம்!

இப்படம் ரசிகர்களுக்கிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. சிலர் மணிரத்தினத்தின் படைப்பையும், கமல்ஹாசனின் அபாரமான நடிப்பையும் பாராட்டினார்கள். இன்னும் சிலர் படமே நல்லா இல்லை கதாபாத்திரம் எதுவும் பொருந்தவில்லை என்று குறை கூறினார்கள்.

குறிப்பாக சிம்பு மற்றும் த்ரிஷாவின் கதாபாத்திரம் சுத்தமாக படத்துக்கு சூட்டாகவில்லை என்ற விமர்சனம் தான் அதிகம் காணப்பட்டது.

தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் தக் லைப் படம் போட்ட ஒரு வாரத்திலேயே நல்ல வசூலை பெற்றது. ஆனால் கடைசி வாரத்தில் அந்த வசூல் கொஞ்சம் குறைய தொடங்கியது.

தோல்வி..

கமல், சிம்பு, திரிஷா மூன்று பிரபலங்கள் இணைந்து நடித்திருந்ததால் படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது படம் உலகளவில் வெறும் ₹47.2 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வியை தழுவியது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →