சம்பளத்தால் கமலுக்கு ஏற்பட்ட தலைவலி.. ஆண்டவர் எடுத்த தனி ரூட்

Kamal : கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான தக் லைஃப் படம் படுமோசமான தோல்வியை தழுவியது. மணிரத்னம், கமல், சிம்பு ஆகியோரின் கூட்டணியில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. ஆகையால் இந்த படத்தை தயாரித்த கமல் மற்றும் மணிரத்னத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதை அடுத்து அடுத்ததாக அன்பறிவு இயக்கும் படத்தில் கமல் நடிக்க இருக்கிறார். இந்த சூழலில் இந்தியன் 2 படத்தில் நடித்தபோது கமலுக்கு சம்பள பாக்கி இருக்கிறதாம். ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியதால் லைக்கா ஒப்பந்தம் போட்ட தொகையை கொடுக்கவில்லை.

இதே போல் சம்பள விஷயத்தில் சில படங்களின் தயாரிப்பாளர்களால் கமலுக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் திடீரென ஒரு முடிவெடுத்து இருக்கிறார். அதாவது இனிமேல் கமல் சொந்த தயாரிப்பிலேயே நடிக்க இருக்கிறாராம்.

தயாரிப்பாளர்களால் கமல் எடுத்த திடீர் முடிவு

மற்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடித்தால் தான் சம்பளப் பிரச்சனை ஏற்படுகிறது. தன்னுடைய முதலீட்டை வைத்தே எடுக்கும் படத்தில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். தக் லைஃப் போன்ற சில படங்கள் தோல்வி பெற்றால் கமலுக்கு முதலீடு மோசம் தான்.

ஆனாலும் அவர் தயாரித்த விக்ரம், அமரன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தால் பன்மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு இனி ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல் நடிக்க இருக்கிறார்.

மேலும் அன்பறிவு இயக்கும் படத்தில் முதலில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க படக்குழு அணுகி இருக்கிறது. ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்போது மாநாடு படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →