விருமன் படத்தில் மாஸ் நடிகரை ஒதுக்கிய கார்த்தி.. கூட்டு சேர்ந்து குடித்தவருக்குக் கிடைத்த தண்டனை

கார்த்தி படத்தில் படு மாஸாக ரி என்ட்ரி கொடுத்து இப்போது ஓரளவுக்கு பட வாய்ப்புகள் பெற்று நடித்து வரும் பெரிய நடிகர் ஒருவரை விருமன் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் முத்தையா விருப்பப்பட்டு இருக்கிறார். ஆனால் கார்த்தி அதை மறுத்து விட்டாராம்.

கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு முத்தையா-கார்த்தி கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் விருமன். இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, நல்ல வசூலும் அள்ளியது.

பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சரண்யா, சூரி, வடிவுக்கரசி, இளவரசு, நைனாசிங்கம்புலி, குத்தாலம் ஓ.ஏ.கே.சுந்தர், பதினெட்டாம் பாண்டியன் ஜி.எம்.சுந்தர்,ஆர்.கே.சுரேஷ், இந்திரஜா, முத்துலட்சுமி அருந்ததி, மகன்கள் கவிஞர் வசுமித்ர, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் களம் இறங்கியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் கருணாஸ், கார்த்தியின் சித்தப்பாவாக நடித்துள்ளார். பந்தல் பாலு கேரக்டரில் நடித்திருக்கும் கருணாஸுக்கு இந்த படத்தில் முக்கியமான காட்சிகளும் உள்ளன. இதே போன்றே முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், கோவை சரளா, லட்சுமி மேனன் நடித்த கொம்பன் படத்தில் கருணாஸ் கார்த்தியின் அண்ணனாக வருவார்.

கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தில் நடிகர் சரவணன் கார்த்தியின் சித்தப்பாவாக வருவார். 90ஸ் களில் நாயகனாக நடித்த சரவணன் 2000 ஆம் ஆண்டு நந்தா படத்தில் வில்லனாக ரி என்ட்ரி கொடுத்தார். அது அவருக்கு செட் ஆகவில்லை. பின்னர் பருத்திவீரனில் செவ்வாழையாக கொடுத்த ரி என்ட்ரி இவருக்கு கிளிக் ஆகியது.

கார்த்தி- சரவணன் கூட்டணி பருத்திவீரனில் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை. இந்நிலையில் இயக்குனர் முத்தையா விருமன் படத்தில் கருணாஸ் கேரக்டரில் சரவணனை நடிக்க வைக்க விரும்பி இருக்கிறார். ஆனால் கார்த்தி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். சரவணனுக்கு கார்த்தி வாய்ப்பு கொடுக்காதது எல்லோருக்கும் ஆச்சரியமாகவே இருந்து இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →