நானும் செட்டிலாக வேண்டாமா என ஆர்யா செய்த வேலை.? பறிபோன பட வாய்ப்பு, தட்டிப்பறித்த கார்த்தி

சில காலமாக மார்க்கெட் டல்லாக இருந்த கார்த்திக்கு தற்போது தொட்டதெல்லாம் துலங்கும் நேரமாக இருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வந்தியத்தேவன் என்னும் அந்த கதாபாத்திரத்தில் கார்த்தி அற்புதமாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

அதைத்தொடர்ந்து வெளியான சர்தார் திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் தற்போது கார்த்தியின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது அவர் கிட்டத்தட்ட 5, 6 திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதிலும் ராஜுமுருகன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் ஜப்பான் திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

சமீபத்தில் தான் இப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து வெளியான போஸ்டரும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தியின் நடிப்பில் சர்தார் 2, கைதி 2 போன்ற படங்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்யா நடிக்க இருந்த ஒரு திரைப்படம் தற்போது கார்த்தியின் கைக்கு வந்திருக்கிறது.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி அடுத்ததாக ஆர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க இருந்தார். ஆனால் ஆர்யா அந்தப் படத்தில் நடிப்பதற்காக 15 கோடி வரை சம்பளம் கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் வேறு ஹீரோவை புக் செய்யும் படி கூறி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஆர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும் கார்த்தி தன்னைத் தேடி வரும் நல்ல வாய்ப்புகளையும் விட்டுவிடாமல் ஏற்றுக்கொள்கிறார். அதனாலேயே இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

நலன் குமாரசாமியின் முந்தைய திரைப்படங்களைப் போலவே இந்த திரைப்படமும் வித்தியாசமான கதைக்களமாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சம்பள விஷயத்தில் ஓவர் அடாவடி செய்த காரணத்தால் ஒரு நல்ல படத்தை ஆர்யா மிஸ் செய்திருக்கிறார். தொடர்ந்து சில தோல்வி படங்களை கொடுத்து வந்த ஆர்யா தற்போது கொம்பன் முத்தையா இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →