சிவகார்த்திகேயனின் டெக்னிக்கை பாலோ செய்யும் கவின்.. அடுத்தடுத்து 100 கோடிக்கு போடும் திட்டம்

நடிகர் கவின் விஜய் தொலைக்காட்சியில் இருக்கும்பொழுது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அதை நம்பி அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அவர் நடித்து ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கே பல வருடங்கள் ஆகிவிட்டது. இதற்கிடையில் கவின் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்பதையே ரசிகர்கள் மறந்து விட்டனர் என்று கூட சொல்லலாம்.

அதன் பின்னர் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கவின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் இழந்த ரசிகர் கூட்டத்தை பல மடங்கு அதிகமாகவே பெற்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கவின் நடித்த படங்கள் ரசிகர்களிடையே நேர்மறை விமர்சனங்களை தான் பெற்றன. இது கவினுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது கவின் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய மார்க்கெட் இப்போது கவனிக்கப்படுகிறது. கவின் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அதை கொடுக்க தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கிறார்கள்.

டாடா திரைப்படம் என்பது கவினுக்கு ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். அந்த பட ரிலீசுக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் கூட கவினை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். மேலும் அவருடைய சொந்த நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் கவினை ஹீரோவாக வைத்து படம் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு வெற்றியை பார்த்திருக்கும் கவின் தற்போது அதை நிலை நிறுத்திக் கொள்ள பயங்கரமாக திட்டம் போட்டு வைத்திருக்கிறார். தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களுக்கு இவர் வைக்கும் முதல் கண்டிஷன் படத்தில் பெரிய ஹீரோயினை தான் நடிக்க வைக்க வேண்டும் என்பது. அப்போதுதான் அவரை பெரிய ஹீரோவாக எடுத்துக் கொள்வார்கள் என்பது தான் திட்டம்.

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த டெக்னிக்கை தான் பயன்படுத்தினார். அதாவது அவர் வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே ஹன்சிகா, சமந்தா, நயன்தாரா என பெரிய பெரிய ஹீரோயின்களை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து தன்னை ஒரு பெரிய ஹீரோவாக காட்டிக் கொண்டார். தற்போது அதையே கவினும் பாலோ செய்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயனின் இடத்தை இவர் பிடிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →