திட்டமிட்டபடி வெளியாகுமா இந்தியன் 3.? சத்தம் இல்லாமல் காய் நகர்த்தும் லைக்கா

Indian 3: ஷங்கர், கமல் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து பாகம் 2 வெளியானது. அதை வெறித்தனமாக கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தியன் 2 எதிர்பார்த்த வரவேற்பு பெறாத நிலையில் அடுத்த பாகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி அப்போதே எழுந்தது. இருந்தாலும் படத்தின் இறுதியில் வெளியான பார்ட் 3 காட்சிகள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான்.

ஆனால் ட்ரெய்லரில் இப்படி காட்டிவிட்டு படத்தில் சொதப்பி விடுவார்களோ என்ற கலக்கம் கமல் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதனாலயே தற்போது லைக்கா இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டு விடலாமா என்ற யோசனையில் இருக்கிறதாம்.

லைக்காவின் மாஸ்டர் பிளான்

அதற்காக தற்போது நெட்ஃப்லிக்ஸ் தரப்பிடம் சத்தம் இல்லாமல் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டாவது பாகத்திற்காக இவர்கள் 125 கோடி வரை கொடுத்து உரிமையை பெற்றனர்.

ஆனால் மூன்றாவது பாகத்திற்காக லைக்கா எதிர்பார்க்கும் தொகை அதைவிட அதிகம். ஏனென்றால் தியேட்டர் மூலம் வரும் லாபத்தையும் இதை வைத்துதான் அவர்கள் ஈடு கட்ட வேண்டும். அதனால் அதிகபட்ச தொகையை அவர்கள் கேட்கிறார்களாம்.

இதற்கு நெட்ஃப்லிக்ஸ் தரப்பிலிருந்து இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. பேச்சுவார்த்தை தான் நடைபெற்று வருகிறது. ஒரு வேளை இது லைக்காவுக்கு சாதகமாக இல்லை என்றால் படம் தியேட்டருக்கு வரலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment