ஐகோர்ட்டில் விஷாலின் கோரிக்கையை ஏற்ற லைக்கா.. 5 வருடமா இழுத்தெடுத்த வழக்கு சுமூகமா முடியுமா.?

Lyca to accept Vishal’s request in Court: நடிகர் விஷால் தற்போது தாமிரபரணி, பூஜை படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற ஆக்சன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இருப்பினும் லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய கடன் தொகையை திருப்பி தரவில்லை என்று கூறி லைக்கா நிறுவனம் அவர் மீது மேல்வழக்கு தொடர்ந்தது.

அதன் பின் விஷாலும், இப்போது லைக்கா நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனுவில், விஷாலின் ஃபிலிம் ஃபேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டைக்கோழி 2 படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியிட்டு உரிமைக்காக லைக்கா நிறுவனத்துடன் 2018ல் 23 கோடியே 21 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

அதனால் 12% ஜிஎஸ்டி தொகையை லைக்கா நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியை 88 லட்சத்தை விஷால் செலுத்தி இருக்கிறார். இதனால் அவருக்கு மிகுந்த மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. அதோடு 500 கோடி கடன் வாங்கி இப்போது கமலை வைத்து இந்தியன் 2 படத்தை லைக்கா எடுத்துள்ளது. இந்த படத்தின் மூலம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் லைக்கா, தன்னுடைய பணத்தை கொடுக்காமல் வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடவும் வாய்ப்பு இருக்கிறது.

ஐகோர்ட்டில் விஷாலின் கோரிக்கையை ஏற்ற லைக்கா

எனவே ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராத தொகை வட்டியுடன் சேர்த்து 5,24,10,423 ரூபாயை தருவதற்கான உத்திரவாதத்தை செலுத்த லைக்கா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும் வரை ஆர்பிஎல் வங்கியில் லைக்கா நிறுவனம் தாக்கல் செய்யும் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றும் மனுவில் விஷால் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் விஷால் தரப்பு வழக்கறிஞர், ‘தங்கள் நிறுவனத்திற்கான பண பரிவர்த்தனை பற்றி ஆய்வு செய்ய ஆடிட்டர் ஒருவரை நியமிக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தனர். அதை லைக்கா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இதனால் ஐந்து வருடங்களாக தொடரும் இந்த வழக்கு சுமூகமாக முடிவதற்கும் இப்போது வாய்ப்பு தென்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →