தலையை பிச்சுக்கும் மணிரத்னம்.. கமல், சிம்புவால் மொத்தமாய் மாறிய தக் லைஃப் தலையெழுத்து

Thug life: இந்திய சினிமாவில் மணிரத்தினத்துக்கு என்று ஒரு புகழ் இருக்கிறது. அதை இத்தனை வருடமாக அவர் காப்பாற்றி வருகிறார். அந்தப் பெயரை இழந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வயதிலும் அவர் உழைத்து வருவது ஆச்சரியம் தான்.

கிட்டதட்ட 35 வருடத்திற்கு பிறகு நாயகன் கூட்டணி மீண்டும் தக் லைஃப் படத்தில் இணைந்தார்கள். ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் இதன் கதை ஆகிவிட்டது. இந்த படத்தில் ஆரம்பத்தில் ஜெயம் ரவி நடிப்பதாக இருந்தது. ஜெயம் ரவி கமலுக்கு எப்பேர்பட்ட தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இருந்தும் அவர் இந்த படத்தில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். அதன்பின்னர் இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் சிம்பு ஆகியோர்கள் இணைந்தார்கள். படம் திரைக்கதை ரெடி பண்ணி இந்தந்த கேரக்டர்களுக்கு இவர்கள்தான் என எல்லாமே முடிவாகிவிட்டது.

மொத்தமாய் மாறிய தக் லைஃப் ஸ்கிரிப்ட்

அதன் பின்னர் திடீரென ஆர்டிஸ்ட் மாறிக்கொண்டே வருகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த திரை கதையையுமே தற்போது மணிரத்தினம் மாற்றுகிறாராம். படத்தின் ஷூட்டிங் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி திரைக்கதையை மாற்றுவது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என தெரியவில்லை.

மேலும் மணிரத்னத்தை பொருத்தவரைக்கும் எந்த ஒரு படத்தையும் 50 நாட்களில் முடித்து விடுவார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் கூட யாரும் எதிர்பார்க்காத வகையில் குறுகிய நாட்களில் எடுத்து முடித்தார்.

இந்த தக் லைஃப் படத்தையும் 50 நாட்களில் எடுக்கத்தான் திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் கமலுக்கு இந்தியன் இரண்டு வேலை, கல்கி படத்தின் வேலை என அவர் ஒரு பக்கம் பிசியாகி விட்டார். சிம்பு ஷூட்டிங் வந்து சேருவதற்கும் நாட்கள் அதிகமாகிவிட்டது.

இதனால் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் 100 நாட்கள் எடுக்கப்படும் என திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால் தற்போது மணிரத்தினம் பயங்கர அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →