ஹீரோயினாக பல பேர் காணாமல் போய்ட்டாங்க.. ஆனா நின்னு கெத்து காட்டும் விஜய் டிவி பிரபலம்

ஒரு நடிகரின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்பு அவருக்கே ஜோடி போட்டு நடித்த பிறகும் நடிகையின் மார்க்கெட் ஃபீல் டவுட் ஆகிவிடும். ஆனால் ஹீரோக்களால் மட்டுமே தமிழ் சினிமாவில் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியும். சொல்லப்போனால் மீனா, குஷ்பு எல்லாம் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தனர்.

ஆனால் இப்போது அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரத்தில் தான் நடித்த வருகிறார்கள். இந்நிலையில் விஜய் டிவியில் ஒரு பிரபலம் பல வருடங்களாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் சின்னத்திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே வெள்ளித்திரையிலும் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

ஒரு சில படங்களில் நடித்த அந்த பிரபலத்திற்கு வெள்ளித்திரை கைகொடுக்காமல் போனது. ஆனால் தற்போதும் சின்னத்திரையில் தனக்கான சிம்மாசனத்தை பிடித்துள்ளார். அதாவது விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி என்ற டிடி தான் அவர்.

கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேலாக இவர் விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார். இந்த தொலைக்காட்சியில் நடக்கும் முக்கிய நிகழ்வில் கண்டிப்பாக டிடி இடம் பெறுவார். காபி வித் டிடி, சூப்பர் சிங்கர் என பல்வேறு நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கி உள்ளார். கமல், விஜய் தொடங்கி பாலிவுட்டில் ஷாருக்கான் வரை டிடி பேட்டி எடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட விழாவிலும் டிடி தான் அந்த நிகழ்வை தொகுத்து வழங்கி இருந்தார். இந்நிலையில் டிடி பேசுகையில் நான் சின்னத்திரையில் பிரபலமாக ஆரம்பித்த நேரத்தில் என்னை சினிமாவில் நடிக்க சொன்னவர்களுக்கு, இங்கேயே எனக்கென்று ஒரு ராஜ்யத்தை உருவாக்கி ராணியாக இருப்பேன் என பதில் அளித்தேன்.

அப்போது ஹீரோயின்களாக இருந்தவர்கள் கூட இப்போது பீல்டில் இல்லை, ஆனால் நான் இன்றும் அன்று போலவே மக்கள் மனதில் ராணியாக இருக்கிறேன் என டிடி கூறி உள்ளார். இத்தனை வருடமாக அதே அழகு, இளமை, திறமையுடன் இருக்கும் டிடி இப்போதும் மக்களின் ஃபேவரட் தொகுப்பாளியாக தான் இருந்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →