அப்பா நண்பர்களே உதவவில்லை.. ஆதங்கத்துடன் பேசிய மயில்சாமி மகன்

Mayilsamy : சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி இரண்டு வருடங்களுக்கு முன்பு சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் மயில்சாமியை பற்றி நிறைய விஷயங்கள் அவர் இறந்த பிறகு தான் வெளியே வந்தது. அவரிடம் உதவி என்று கேட்டால் எப்படியும் உதவி விடுவாராம். தன்னிடம் பணம் இல்லாத போதும், பிறர்களிடம் உதவி கேட்டு பலருக்கு நன்மை செய்திருக்கிறாராம்.

பலரின் மருத்துவ வசதி, படிப்புக்கான பண வசதி என பல உதவிகள் செய்துள்ளார். அதை காட்டிலும் ஒரு நல்ல மனிதர் மயில்சாமி என்ற பெயரை வாங்கி இருக்கிறார். ஆனால் அவரது மகன் யாருமே தனக்கு உதவவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆதங்கத்தை வெளிப்படுத்திய மயில்சாமி மகன்

மயில்சாமியின் மகன் அன்பு நடிப்பில் எமன் கட்டளை என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் அன்பு கலந்துகொண்டு பேசினார்.

அப்போது தன்னிடம் வசதி இல்லாத போதும் தனது அப்பா எல்லோருக்கும் உதவினார். ஆனால் பட வாய்ப்பு கேட்டு அலைந்த போது என் தந்தையின் நண்பர்களே தனக்கு உதவவில்லை. தன்னுடைய முயற்சியால் இரண்டு படங்களில் நடித்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

மயில்சாமியின் மகன் அன்பு இவ்வாறு வேதனையுடன் பேசியது பலரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது. கண்டிப்பாக மயில்சாமியின் நல்ல குணம் மற்றும் அவரின் ஆத்மா அவரது வாரிசை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும் என்றும் கூறி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →