2 படத்தோட காணாமல் போன ஹீரோயின்.. இந்த நடிகை தான் நடிக்கணும்னு வச்சு செஞ்ச கமல்

Kamal Haasan: தமிழ் சினிமா வரலாற்றில் காணாமல் போன நடிகைகள் என ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. இது போன்ற நடிகைகள் ஒன்று அல்லது இரண்டு படங்களில் தான் நடித்திருப்பார்கள். அவர்களுடைய முகத்தோற்றம் அல்லது நடிப்பு திறமை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பார்கள்.

அப்படித்தான் கமல் படத்தில் நடித்த நடிகை ஒருவரும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறார். கமலை பொருத்த வரைக்கும் தொடர்ந்து ஒரு ஹீரோயின் உடன் நடிப்பதை பெரும்பாலும் விரும்ப மாட்டார். நிறைய புது முகங்களுக்கும், மற்ற மொழி நடிகைகளுக்கும் வாய்ப்பு கொடுப்பார். அப்படித்தான் இந்த நடிகையுடன் நடித்தே ஆக வேண்டும் என அடம்பிடித்தே நடித்திருக்கிறார்.

2 படங்களோடு காணாமல் போன நடிகை

பின்னணிப் பாடகியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டு பின்னர் ஹீரோயின் ஆக நடித்தவர் தான் நடிகை வசுந்தராதாஸ். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த வெளியான முதல்வன் படத்தில் சகலக்க பேபி என்னும் பாடலை இவர் பாடியிருந்தார். இதற்காக வசந்தராவுக்கு பிலிம் பேர் விருது கூட கிடைத்தது. அதை தொடர்ந்து கமல் தன்னுடைய ஹேராம் படத்தில் இந்த பாடகி தான் நடிக்க வேண்டும் என ரொம்பவும் ஆசைப்பட்டார்.

பின்னணிப் பாடகியை ஹீரோயின் ஆக்கி நடிக்க வைத்து அழகு பார்த்தார். அதை தொடர்ந்து தான் வசுந்தரா நடிகர் அஜித்குமார் நடித்த ஹிட் அடித்த சிட்டிசன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். இந்த படங்களை தொடர்ந்து அவருக்கு ஹிந்தி மற்றும் மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு வசுந்தரா தாஸ் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

வசுந்தரா தாசின் துரு துருப்புடன் இருக்கும் நடிப்பு, அவருடைய கண்கள் இரண்டிற்குமே தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய ரசிகர்கள் ஆனார்கள். நடிப்பு மட்டுமில்லாமல் வசுந்தரா தாஸ் சிட்டிசன் படத்தில் பூக்காரா, ஐ லைக் யு போன்ற பாடல்களையும் பாடி இருக்கிறார். ரிதம் படத்தில் ஐயோ பத்திக்கிச்சு, குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல்கள் பாடியது இவர்தான்.

அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, சில்லுனு ஒரு காதல் படத்தில் மச்சக்காரி, சிவகாசி படத்தில் தீபாவளி, அன்பே ஆருயிரே படத்தில் மரங்கொத்தியே போன்ற ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். பின்னணி பாடகியாக சினிமாவில் ஆக்டிவாக இருந்த வசுந்தரா தாஸ் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →