நயன்தாரா, சமந்தா எல்லாம் பின்ன போங்க.. சைலன்டாக வளர்ந்து வரும் சீரியல் நடிகை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மற்றும் சமந்தா இருவரும் தான் சில வருடங்களாக தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். ஏனென்றால் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ள இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதுமட்டும்இன்றி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளிலும் முதல் 2 இடத்தில் இவர்கள் தான் உள்ளனர்.

இந்நிலையில் சமந்தாவுக்கு அரிய வகை நோய் ஏற்பட்டதால் அதிகம் படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது ஒவ்வொரு படங்களில் நடித்து வருகிறார். அதுவும் தமிழில் சமந்தா நடிப்பில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தான் வெளியாகி இருந்தது.

சமந்தாவுக்கு இப்படி என்றால் நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து பட வாய்ப்பு குறைந்து வருகிறது. மேலும் அவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமின்றி பாலிவுட்டில் இப்போது நயன்தாரா ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் சமந்தாவை பின்னுக்கு தள்ளி சீரியல் நடிகை ஒருவர் அந்த இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். அதாவது பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் இரண்டு கதாநாயகிகள் கொண்ட படத்தில் நடித்து வந்த நிலையில் இப்போது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு ஒரு மாதத்துக்குள்ளையே மூன்று படங்கள் வெளியாக உள்ளது. அதாவது ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ள அகிலன் படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் லாரன்ஸ்க்கு ஜோடியாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள ருத்ரன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள இந்த மூன்று படங்களிலும் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இதன் மூலம் அவரது மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →