சிம்புவை வித்தியாசமாக பழிவாங்கிய நயன்தாரா.. தெரியாமல் போய் வலையில் சிக்கிய டிஆர்

கடந்த 2006 ஆம் ஆண்டு சிம்புவின் இயக்கி நடித்த படம் வல்லவன். இந்த படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும்இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் கூட வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அதன் பிறகு இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இருவரும் தாங்கள் காதலிக்கவில்லை என கூறி பிரிந்தனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் அந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்பட்டது.

மேலும் சிம்புவே பழிவாங்கும் நோக்கத்தில் தான் சிம்புவுக்கு நெருங்கிய ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என சிம்பு உடன் நயன்தாரா சவால் விட்டதாகவும் கூறுகின்றனர் அதற்காகத்தான் சிம்புவின் நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவனை காதலித்ததாகவும் தகவல் வெளியானது.

நயன்தாரா தனது திருமண பத்திரிகையை முதன்முதலில் சிம்புவின் அப்பாவிடம் டிஆர் அவர்களிடம் பத்திரிக்கையை கொடுத்துள்ளார். இதற்கு காரணம் தனது திருமண பத்திரிக்கை முதலில் சிம்புவிற்கு தெரிய வேண்டும் என்பதே அவரது திட்டம். டிஆர் திருமணத்தில் வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை கேள்விபட்ட சிம்பு தன்னை பழிவாங்குவதற்காக தான் நயன்தாரா தன் அப்பாவிடம் பத்திரிகை கொடுத்ததாகக் கூறியுள்ளார். ஆனால் இது தெரியாமல் டிஆர் பத்திரிக்கை வாங்கியுள்ளார். அதனால் தற்போது சிம்பு, டிஆர் அவர்கள் மீது கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எது எப்படியோ நேற்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்து இருக்கும் நிலையில் இனி குழந்தை குடும்பம் என செட்டில் ஆக்குவார். அப்போது சிம்பு யாரிடம் கோபத்தை காட்டப் போகிறார் என தெரியாது. தற்சமயம் சிம்புவுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதால் இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி வரும் நாட்களில் திருமணத்தைக் குறித்து நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →