மனமுடைந்து போன நெல்சன்.. உடனே போன் போட்ட விஜய்!

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்த வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

இருப்பினும் இப்படத்திற்கு போட்டியாக ராக்கிங் ஸ்டார் நடிப்பில் கேஜிஎஃப்-2 என்ற திரைப்படமும் பீஸ்ட் வெளியான அடுத்த நாளே திரையிடப்பட்டதால், தற்போது திரையரங்கில் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலும் ரசிகர்களிடம் கேஜிஎஃப்-2 தனி இடத்தையே பெற்றிருக்கிறது.

ஆனால் பீஸ்ட் படத்தைப் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களிடையே பீஸ்ட் படத்தை குறித்து கருத்து கேட்டபோது, படத்தில் ஒரு சில காட்சிகளில் லாஜிக் இல்லாததால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனால் மனமுடைந்து போன நெல்சன்க்கு விஜய் போன் செய்துள்ளார். தன்னுடைய படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லையா? என நெல்சன், விஜயிடம் கேட்ட போது, ‘யாருடைய விமர்சனங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்.

நாம் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என கூறியுள்ளார். மேலும் வெற்றி தோல்வி சினிமாவில் சகஜம் தான். அதனால் அடுத்த படத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அதன் பிறகு நாம் இருவரும் இணைந்து ஒரு வெற்றிப்படத்தை கொடுக்கலாம் என அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

தற்போது தளபதி விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ள நிலையில், அடுத்தபடியாக விஜய்யின் 67-வது படத்தை மீண்டும் நெல்சன்  திலீப்குமார் இயக்க வாய்ப்பிருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →