கமல், விக்ரமிற்கு டஃப் கொடுக்கும் சூர்யா.. ஒரே படத்தில் இத்தனை கெட்டப்புகளா?

சரித்திர கதைகளை படித்து தெரிந்து கொள்வதை விட, அதை படமாக பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவதை தன்னுடைய திரை கனவாக வைத்திருந்த மணிரத்தினம், அதன் முதல் பாகத்தை வெற்றிகரமாக படமாக்கி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்.

இந்தப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை ட்ரெண்ட்டானது. இதேபோன்று சூர்யாவும் சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்ததாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இயக்குனர் பாலா இயக்கிய வணங்கான் படத்தின் கிளைமாக்ஸ் கதை இன்னும் தயாராகாததால் அதற்கான கால இடைவெளியில் தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் தன்னுடைய 42-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தயாராகிறது. 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் பிரமாண்ட படமான இதில், சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். அரதர், வெண்காட்டர், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் உள்ளிட்ட 5 கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்கிறார்.

ஏற்கனவே முன்னணி நடிகர்கள் பலர் இதுவரை 2, 3 வேடங்களில் பொதுவாக நடிப்பதுண்டு. கமலஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் விக்ரமும் சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தில் 10 வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சூர்யா 5 வேடங்களில் நடிக்க இருக்கும் சரித்திரக் கதை களத்தைக் கொண்ட இந்தப் படம் தான் இதுவரை கதாநாயகர்கள் 5 வேடங்களில் நடிக்கும் முதல் படம் ஆகும். ஆகையால் பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படம் தான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் படத்தை முடித்தபிறகு பல பிரபலங்கள் நடிக்க ஆசைப்பட்ட வேள்பாரி சரித்திரக் கதையிலும் சூர்யா தன் நடிக்கப்போகிறார். வேள்பாரி படத்தின் முதல் ஒத்திகை தான் சூர்யாவின் 42 வது படம் என்றும் சொல்லப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →