ஒரே போடாய் உண்மையை போட்டுடைத்த கூல் சுரேஷ்.. நண்பனுக்கு உதவாத சிம்பு

சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகம் ஆனாலும் நடுவில் தொடர் தோல்வியை கொடுத்து மிகப்பெரிய அப்சட்டில் இருந்தார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரது ரசிகர்கள் மட்டுமே என்று சிம்பு பல மேடைகளில் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி மாநாடு ஆடியோ லான்ஞ்சிலேயே சிம்பு தனது ரசிகர்களுக்காக கண்கலங்கி இருந்தார். தற்போது சிம்பு மீண்டும் தரமான கம்பேக் கொடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதற்கு அவரது ரசிகர்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

அந்த வகையில் சிம்பு வெறியனாக இருப்பவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் ஆரம்பத்தில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். மேலும் சிம்புவின் மாநாடு படம் வெளியான போது திரையரங்கு சென்று படத்தைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு கூல் சுரேஷ் பேசியது இணையத்தில் வைரலானது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கூல் சுரேஷ் ஒவ்வொரு படம் வெளியான போதும் தனது விமர்சனத்தை கூறி வருகிறார். மேலும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டிலை ஃபேமஸ் ஆக்கியது கூல் சுரேஷ் தான். வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு வணக்கத்தை போடு என பஞ்ச் டயலாக்கை கூறி இப்படத்தை ப்ரோமோஷன் செய்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் இடம் பல கேள்வி கேட்கப்பட்டது. அதாவது இது போன்ற படத்தை பிரமோஷன் செய்வதற்காக உங்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. அப்படி யாரும் எனக்கு 10 பைசா கூட கொடுத்ததில்லை என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

10 கோடி, 20 கோடி என பட்ஜெட்டில் படங்களை எடுத்துவிட்டு தங்களிடம் சுத்தமாக காசு இல்லாதது போல பேசுவார்கள். நானும் புள்ள குட்டிக்காரன் தான், யாராவது பணம் கொடுத்தால் நல்லா தான் இருக்கும். பணம் கொடுத்தா நான் வாங்க மாட்டேன்னு சொல்லவே இல்ல, ஆனா யாரும் கொடுக்குறதுக்கு தயாரா இல்லை.

நான் சிம்பு ரசிகர் என்பதால் மட்டுமே அவர் படத்தை நான் புரமோஷன் செய்கிறேன். தற்போது எனக்கு உதவி செய்வது என்றால் அது சந்தானம் மட்டும்தான் என்று கூல் சுரேஷ் கூறியுள்ளார். சிம்புவின் தீவிர ரசிகராக இருக்கும் இவருக்கு சிம்பு கூட உதவாதது மிகுந்த வேதனை அளிப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →