தெறிக்கவிட போகும் கமலின் விக்ரம் படம்.. உலகம் முழுவதும் இவ்வளவு தியேட்டர்களா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படம் வருகின்ற 3 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ளதால் இப்போதே படத்திற்கான பிரமோஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இப்படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு கமல் சென்று வருகிறார். இந்த பிரமோஷன் வேலைகளுக்காகவும் மேற்படி சில புது டெக்னிக்களுக்காகவும் அமெரிக்கா வரை சென்று படத்தை மெருகேற்றி இருக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் விக்ரம் படம் உலக முழுவது கிட்டதட்ட 5000 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவில் 400 திரையரங்குகளிலும், மும்பையில் 1500 திரையரங்குகளிலும் விக்ரம் படம் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1000 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆக உள்ளது. விக்ரம் படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் தற்போது படத்திற்கான புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு கமலின் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக விக்ரம் படத்தின் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

இதனால் இன்னும் ஓரிரு நாட்களிலேயே அனைத்து திரையரங்குகளிலும் முழு புக்கிங் ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் தற்போதே விக்ரம் படத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என கூறி வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →