இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான் நடிகர்கள், மற்றவர்கள் எல்லாம் காசுக்காக மட்டுமே செய்யும் வேலை.. பரபரப்பை கிளப்பிய பிரபலம்

சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் இரண்டு நடிகர்களை தவிர வேறு யாரையும் நான் நடிகர் ஒத்துக்க மாட்டேன் என்று பிரபலம் ஒருவர் பேட்டியின் மூலம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

80-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 60-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் மேடை நாடகங்களில் 1000 முறைக்கும் மேலாக நடித்தவர் கவிதாலயா கிருஷ்ணா என நன்கு அறியப்பட்ட டி. கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர்களை பற்றி விமர்சித்து பேசி இருக்கிறார்.

இவர் கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து, இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கிய நிறைய படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்த வந்ததால் இவருடைய பெயருடன் கவிதாலயா என்று சேர்த்துக்கொள்ளப்பட்டு தற்போது ரசிகர்களிடம் நன்கு பரீட்சியமானவராக உள்ளார்.

இவர் அளித்திருக்கும் சமீபத்திய பேட்டி ஒன்றில் செவாலியர் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் மட்டுமே நடிகர்கள். மற்ற நடிகர்கள் எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில் தான் சினிமா துறை என்று வெளிப்படையாக கருத்து பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் சினிமாவில் பல ஆண்டு அனுபவம் உடைய இவருடைய கருத்துக்கு சிலர் ஆதரவு அளித்தாலும், மற்ற ஹீரோக்களை, நடிகர்களே இல்லை என்று சொன்னதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் சிவாஜி மற்றும் கமல் இருவரும் தேவர் மகன் படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள்.

இந்த படத்தில் இருவரது நடிப்பையும் ஒன்றாக பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அத்துடன் சிவாஜியும் கமலஹாசனும் நடிப்பிற்காக தங்களையே வருத்தி பல தியாகங்களை செய்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதனாலேயே இவர்களுக்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர் வட்டம் இருக்கிறது.

மேலும் கவிதாலயா கிருஷ்ணன், சிவாஜி மற்றும் கமல் மட்டுமே நடிகர்கள் மற்றவர்கள் எல்லாம் நடிகர்களாக ஒத்துக் கொள்ள மாட்டேன் என சொன்னது இப்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →