அயலான் அள்ளிக் கொடுத்ததா, கையை கடித்ததா.? வரவும் செலவும், ஒரிஜினல் வசூல் ரிப்போர்ட்

Ayalaan Real Boxoffice Collection Report: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாக கிடப்பில் கிடந்த அயலான் கடந்த பொங்கலுக்கு வெளியானது. தற்போது வரை இப்படம் 96 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் அயலான் படத்தின் வரவு, செலவு பற்றிய ஒரிஜினல் ரிப்போர்ட்டை காண்போம். இப்படத்தின் தயாரிப்பு செலவு என்று பார்க்கையில் அது 90 கோடியாக இருக்கிறது. அதை அடுத்து ப்ரமோஷனுக்காக மட்டுமே கிட்டதட்ட 4 கோடி ரூபாயை தயாரிப்பு தரப்பு செலவழித்துள்ளது.

மேலும் விநியோகத்திற்காக 1.5 கோடியும், வட்டி 75 கோடியும் ஆக இருக்கிறது. ஆக மொத்தம் 170.5 கோடி அயலான் படத்திற்கான மொத்த செலவு ஆகும். இதில் இத்தனை கோடி வட்டி மட்டுமா என பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் அயலானுக்காக வாங்கப்பட்ட 90 கோடியில் வருடத்திற்கு 32 கோடி மட்டுமே வட்டியாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

படம் வருஷ கணக்கில் இழுத்தெடுக்கப்பட்ட கணக்கையும் சேர்த்தால் வட்டி மட்டுமே 100 கோடியை தாண்டும். ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து பைனான்சியர்களிடம் ஒரு பேச்சு வார்த்தை நடத்தி 75 கோடி மட்டும் வட்டியாக நிர்ணயிக்கும் படி ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது அயலான் படத்தின் பிசினஸ் என்று பார்க்கையில் தமிழ்நாட்டின் தியேட்டர் உரிமம் மட்டும் 34.33 கோடி ஆகும். கேரளாவில் 75 லட்சமும், கர்நாடகா 3 கோடி, தெலுங்கானா 2 கோடி, ஓவர்சீஸ் உரிமம் 12 கோடி ஆக இருக்கிறது. இதில் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 13 கோடியும், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை 20 கோடிக்கும் விற்கப்பட்டிருக்கிறது.

இதில் தமிழை தவிர மற்ற மொழிகளின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்பனையாகவில்லை. மேலும் ஆடியோ உரிமை 2 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் அயலான் படத்தின் மொத்த பிசினஸ் 86.75 கோடி ஆகும். இன்றைய தேதியில் அயலான் படத்தின் தமிழக வசூல் 36.79 கோடி. இதில் தயாரிப்பாளரின் ஷேர் 29.11 கோடி ஆகும்.

மற்ற மாநிலங்களை பொருத்தவரையில் அயலான் படம் பெரிய அளவில் லாபத்தை கொடுக்கவில்லை. அதேபோல் ஓவர் சீசிலும் நஷ்டத்தை தான் சந்தித்து இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயனின் தோல்வி பட பட்டியலில் அயலானும் இணைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →