42 வருட தவம், யாருக்கும் விட்டுக் கொடுக்காத மணிரத்தினம்.. வெறிகொண்டு காத்திருக்கும் திரையுலகம்

மணிரத்தினம் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார். தமிழ் சினிமாவின் அடையாளமாக உள்ள பல முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நேற்று பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆனால் பொன்னியின் செல்வன் படம் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே எடுக்க பலர் முயற்சி செய்திருந்தனர். முதலில் எம்ஜிஆர் இப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்த நிலையில் அது நிறைவேறாமல் போக எம்ஜிஆர்யிடம் அனுமதி வாங்கி கமலஹாசன் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சி செய்தார்.

உலகநாயகன் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் சத்யராஜ், நாசர், நிழல்கள் ரவி போன்றோர் நடிப்பில் இப்படம் உருவாக இருந்த நிலையில் சில காரணங்களினால் தடைப்பட்டு போனது. பல வருட போராட்டத்திற்கு பின்பு தற்போது மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார்.

மணிரத்தினம் இப்படத்தை ரொம்ப கஷ்டப்பட்டு தான் எடுத்துள்ளார். அதாவது 1980 லேயே எடுக்க முயற்சி செய்தார். அது கை கொடுக்காமல் போக 2000,2010 போன்ற ஆண்டுகளில் முயற்சி செய்து கடைசியாக 2022 இல் சாத்தியமாக்கி உள்ளார் மணிரத்தினம்.

மேலும் அப்போதே பொன்னியின் செல்வன் படத்தை எடுத்திருந்தால் இது போன்ற தத்ரூபமான காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் தற்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு படத்தை மெருகேற்றி உள்ளார் மணிரத்தினம்.

இதனால் பொன்னின் செல்வன் படம் ஒவ்வொரு முறையும் தாமதமானாலும் தற்போது முழுமையான தரத்துடன் உருவாகியுள்ளது. ஆகையால் பொன்னியின் பொன்னியின் செல்வன் படம் என்னுடையது என்று மணிரத்தினம் சொல்வதில் எந்த தவறும் இல்லை. மேலும் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் சர்வதேச அளவில் வெளியாக உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →