பிக் பாஸில் குயின்ஸி வாங்கிய சம்பளம்.. மிச்சர் சாப்பிட்டதற்கு இவ்வளவு சம்பளமா?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில் இன்று குயின்ஸி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். மாடல் அழகியான குயின்ஸி சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா தொடரில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் தொடக்கத்திலிருந்து இவருடைய ஈடுபாடு குறைவாக தான் இருந்தது. ஆனால் இவரது ஆடை மற்றும் மேக்கப் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. மேலும் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கும். ஆகையால் குயின்ஸியும் ஏதாவது சர்ச்சையில் சிக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஷிவனை வம்பு இழுப்பதற்காக கதிரவனை ரொமான்ஸ் செய்வது போல விளையாட்டு காட்டினார். மேலும் இப்போதுதான் குயின்ஸி டாஸ்கில் சற்று கவனம் செலுத்த ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் பயணித்த குவின்ஸி இன்றுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இவர் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் பதவியில் இருந்த போது சிறந்து விளையாடினார். ஆனால் மற்ற நேரங்களில் மிச்சர் சாப்பிடும் போட்டியாளர் என்று பெயர் வாங்கிவிட்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் குவின்ஸி ஒரு வாரத்திற்கு 15 லட்சத்திலிருந்து 20 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியுள்ளார்.

ஆகையால் கிட்டத்தட்ட 8 வாரங்களை கடந்த நிலையில் 1.60 லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை சம்பளமாக பெற்றிருக்கக்கூடும். சும்மா மிச்சர் சாப்பிட்டதற்கே இவ்வளவு சம்பளமா என பலரும் குயின்ஸியின் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கின்றனர்.

மேலும் இன்று அவருடைய எலிமினேஷன் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்த உள்ளது. ஆனால் கடைசியில் ஒருவர் மட்டுமே வெற்றியாளர் ஆக முடியும் என்பதே நிதர்சனம். ஆகையால் ஒவ்வொரு வாரமும் ஒரு எலிமினேஷன் தொடர்ந்து நடைபெற்று தான் வரும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →